தாராள பிரபு நடிகையின் தாராள குணம்… குவியும் வாழ்த்துகள்!

அருண் விஜய்யுடன் தடம், ஹரிஷ் கல்யாணுடன் தாராள பிரபு படங்களில் நடித்த நடிகை தான்யா ஹோப் பொதுமக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

‘தடம்’, ‘தாராள பிரபு’ போன்ற படங்களில் நடித்தவர் தான்யா ஹோப். இப்படங்கள் இரண்டும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் தான்யாவிற்கு சிறந்த பெயரையும் பெற்றுத் தந்தது. இவர் பல்வேறு மக்கள் பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார்.

குறிப்பாக எளிய மக்களின் பசியை போக்கும்விதமாக உணவளித்து வருகிறார். இதற்காக மாதம் ஒரு கிராமத்தை தேர்வு செய்து அந்த அந்த கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு அளித்து வருகிறார். இதன் மூலம் சராசரியாக 200 நபர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்து வருகிறார்.

தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து தான்யா ஹோப் இந்த சேவையை செய்து வருகிறார். இதற்கு பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!