நெடுஞ்சாலை திறப்புக்காக காத்திருந்த ஜனாதிபதி… சிறுவன் செய்த சுட்டித்தனம்!

துருக்கியில் ஜனாதிபதி திறந்துவைக்கவிருந்த நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை பல மணி நேரம் காத்திருந்த சிறுவன் பொறுமை தாங்காமல் திறந்துவைத்த நிகழ்வு அனைவரையும் நகைப்பில் ஆழ்த்தியது.

அரசு சார்பில் ஏதாவது சாலைகள்,பாலங்கள், சுரங்கப்பாதை கட்டப்பட்டு திறக்கப்படுகிறது என்றால் அதில் சிறப்பு விருந்தினராக அந்நாட்டில் முக்கிய தலைவர்கள், ஜனாதிபதி அந்தஸ்தில் உள்ளவர்கள் திறந்து வைப்பது வழக்கம். மேலும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் குழந்தைகள் பூங்கொத்து குடித்து விருந்தினரை வரவேற்பதோடு நிகழ்ச்சியின் இறுதி வரை அவர்கள் அருகிலேயே நின்று விழாவினைச் சிறப்பிப்பார்கள். அப்படி ஒரு நிகழ்வு தான் துருக்கியில் அரங்கேறியது. ஆனால் இங்கு சற்று வித்தியாசமான நிகழ்வு அனைவரையும் நகைப்பில் ஆழ்த்தியது.

அப்படி என்ன நிகழ்ந்தது தெரியுமா? துருக்கியில் பல கோடி ரூபாய் செலவில், நெடுஞ்சாலை சுரங்கப்பாதை கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைப்பதற்காக துருக்கி நாட்டின் அதிபர் தயிப் எர்டோகன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இந்நிகழ்ச்சியில் இவரை குழந்தைகள் வரவேற்பதற்காக மேடையில் காத்திருத்தனர். வழக்கம் போல ரிப்பன் வெட்டி திறந்து வைப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. விழாவில் நிகழ்ச்சி குறித்து பேசிக்கொண்டிருந்த நிலையில், பொறுமை தாங்காமல் இருந்த சுட்டிப்பையன் ஒருவர், தன் கைகளாலேயே ரிப்பன் வெட்டி திறப்பு விழாவை நடத்திவிட்டான். இதனைப்பார்த்த ஜனாதிபதி சிரித்துக்கொண்டே என்ன செய்தாய்? என்று தலையில் தட்டி செல்லமாகத் தட்டினார். இச்செயல் விழாவில் இருந்த அனைவரையும் நகைப்பில் ஆழ்த்தியது. இதனையடுத்து அதிகாரப் பூர்வமாக மீண்டும் ஒரு முறை சுரங்கப்பாதையை ஜனாதிபதி தயிப் எர்டோகன் திறந்து வைத்தார்.

குழந்தைகளை விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவார்கள். இதுப்போன்ற நிகழ்வுகள் எதுவும் புதிதல்ல. ஆனால் ஜனாதிபதி நிகழ்ச்சியில் சிறுவன் செய்த இந்த சுட்டித்தனம் அனைவரையும் கவர்ந்தது. மேலும் சமூக வலைத்தளத்தில் குழந்தையின் இத்தகைய செயல் குறித்து சுட்டித்தனமான கருத்துக்களை நெட்டிசன்கள் பகிர்ந்துவருகின்றனர்.- source: abp-epaper * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!