சாம்சங் இன் புதிய கேலக்ஸி எஸ்9 சீரிஸ் புகைப்படங்கள் வெளியானது இணையத்தில்…!


சாம்சங் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி எஸ்9 சீரிஸ் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி டீசரில் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஸ்மார்ட்போன் சார்ந்த விவரங்கள் வெளியாகி வருகின்றன.

பார்சிலோனாவில் அடுத்த மாதம் துவங்க இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2018 விழாவில் புதிய கேலக்ஸி எஸ்9 சீரிஸ் வெளியாகும் முன் அதன் புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. ட்விட்டரில் @evleaks மூலம் கசிந்திருக்கும் புகைப்படத்தில் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் என இரண்டு ஸ்மார்ட்போன்களும் இடம்பெற்றிருக்கின்றன.

புதிய கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன்கள் பார்க்க எஸ்8 சீரிஸ் போன்றே காட்சியளிக்கிறது. அந்த வகையில் முன்பக்கம் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள், அதிகப்படியான சென்சார்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.


சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் சிறப்பம்சங்கள்:

– 5.8 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 2960×1440 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
– 6.2 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 2960×1440 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
– அட்ரினோ 630 GPU
– ஆக்டாகோர் எக்சைனோஸ் 9 சீரிஸ் சிப்செட்
– மாலி G72MP18 GPU
– 4 ஜிபி ரேம், எஸ்9 பிளஸ் – 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, எஸ்9 பிளஸ் – 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
– ஒற்றை / ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.4-f/1.5 அப்ரேச்சர்
– எஸ்9 பிளஸ் 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
– 8 எம்பி செல்ஃபி கேமரா, வைடு ஆங்கிள் லென்ஸ்
– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– எஸ்9 3000 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
– எஸ்9 பிளஸ் 3500 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
– வயர்லெஸ் சார்ஜிங் வசதி

சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2018 விழா பார்சிலோனாவில் பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை மார்ச் 16-ம் தேதி துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. – Source: maalaimalar.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!