மத்திய அரசின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது இந்தப் பெண்ணுக்கா கிடைத்துள்ளது…!


மூலிகை மருந்து வழங்கி பாம்பு கடித்தவர்கள் உயிரை காப்பாற்றும் கேரள ஆதிவாசி பெண்ணுக்கு மத்திய அரசின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.

மத்திய அரசின் மிக உயரிய விருதான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் கேரளாவை சேர்ந்த ஒரு ஆதிவாசி பெண்ணுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. பாம்பு கடிக்கு நாட்டு மருந்து கண்டு பிடித்து அதன் மூலம் பலர் உயிரை காப்பாற்றியதற்காக இந்த விருதை அந்த பெண் பெற்றுள்ளார்.


அவரது பெயர் லெட்சுமி குட்டி அம்மா (வயது 75). கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விதுரா காட்டு பகுதியில் காணி இன ஆதிவாசி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இவர் குடிசையில் தனிமையில் வசித்து வருகிறார்.

தனது கணவர் மாத்தன் காணி இறந்தபிறகு லெட்சுமிகுட்டி அம்மாஅந்த பகுதி மக்களுக்காகவே தனது வாழ்க்கையை அர்பணித்து உள்ளார். தனது அனுபவம் மூலம் அவரே பல்வேறு மூலிகை மூலம் பாம்பு கடிக்கு நாட்டு மருந்து கண்டு பிடித்து அதன்மூலம் பலருக்கும் சிகிச்சை அளித்து அவர்கள் உயிரை காப்பாற்றி உள்ளார்.


இவர் 500-க்கும் மேற்பட்ட நாட்டு மருந்துகளையும் கண்டுபிடித்து அதன் மூலம் ஆதிவாசி மக்களுக்கு சிகிச்சை கொடுத்து வரு கிறார். இவரது மூலிகை மருந்துகளின் மகத்துவத்தை அறிந்து பக்கத்து கிராமங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் இங்கு வந்து இவரிடம் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

லெட்சுமிகுட்டி அம்மா அந்த ஆதிவாசி கிராமத்தில் இருந்து பள்ளிக்கூடத்திற்கு சென்று கல்வி கற்ற முதல் ஆதிவாசி பெண் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். 7-ம் வகுப்பு வரை படித்துள்ள அவர் பல்வேறு பாம்பு கடி, வி‌ஷ பூச்சி கடிகளால் பாதிக்கப்பட்ட மக்களின் உயிரை காப்பாற்றி ஆதிவாசி மக்களால் தெய்வமாக போற்றப்படுகிறார். – Source: maalaimalar.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!