இந்தியாவில் டி1 பிளஸ் மொபைல் அறிமுகம்! என்ன விலை தெரியுமா..?


டீடெல் நிறுவனத்தின் புதிய மொபைல் போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த டி1 மொபைல் போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக புதிய டீடெல் டி1 பிளஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டீடெல் நிறுவனத்தின் புதிய ஃபீச்சர் போன் ஜனவரி 26-ம் தேதி நள்ளிரவு முதல் B2BAdda.com வலைத்தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.

டீடெல் டி1 பிளஸ் ஃபீச்சர் போனில் 1.44 இன்ச் TFT டிஸ்ப்ளே, T9 பிளாஸ்டிக் கீபோர்டு வழங்கப்ட்டுள்ளது. 650 எம்.ஏ.ஹெச். லி-ஐயன் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் டி1 பிளஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, பவர் சேவிங் மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டி1 பிளஸ் மொபைல் போனில் வயர்லெஸ் எஃப்.எம். ரெக்கார்டிங் வசதி மற்றும் 3D ஸ்பீக்கர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை டி1 பிளஸ் மொபைலில் ஜி.பி.ஆர்.எஸ். வெப் பிரவுசர், டூயல் சிம் ஸ்லாட் மற்றும் பெரிய டார்ச் லைட் வழங்கப்பட்டுள்ளது. டீடெல் டி1 பிளஸ் ஸ்மார்ட்போன் ஏழு வெவ்வேறு நிறங்களில் கிடைப்பதோடு, பி.எஸ்.என்.எல். சார்பில் டாக்டைம் மற்றும் டேட்டா சலுகைகளும் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் டீடெல் டி1 பிளஸ் மொபைல் போன் விலை ரூ.399 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.-Source: maalaimalar

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/2rYY05