கோவில்களில் பூஜை செய்யும் போது மணி அடிப்பது ஏன்?

கோவில்களிலும், வீடுகளிலும் பூஜை செய்யும் போது மணி அடிப்பதற்கு சில சாஸ்திர காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

“ஆகமார்த்தம் து தேவாநாம் கமநார்த்தம் து ராக்ஷஸாம்
கண்டாரவம் கரோம்யாதௌ தேவதாஹ்வாந லாஞ்ச்சனம்.”

  • என்ற மந்திரத்தைச் சொல்லி மணி அடித்து பூஜையினைத் துவக்குவார்கள்.

பூஜை நடக்கும் இடத்திலிருந்து அசுரத்தனமான தீய சக்திகள் விலகிச் செல்லவும், பூஜைக்குரிய பிரதான தெய்வத்தை ஆவாஹனம் செய்வதற்குத் துணையாக சுபத்தினைத் தரக்கூடிய மங்களகரமான தேவதைகளின் சக்தி வந்து சேரட்டும் என்பதற்காக இந்த மணியினை அடிக்கிறேன் என்பது இந்த மந்திரத்தின் பொருள்.

மணி ஓசையால் பூஜை நடக்கும் இடத்திலிருந்து தீய சக்திகள் விலகிச் செல்கின்றன.மணியோசை ஒலிக்கும்போது அங்கே இறை சாந்நித்யம் வந்து சேர்ந்துவிடும் என்பது அனுபவபூர்வமான உண்மை.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!