புதிய டிமென்சிட்டி 1200 5ஜி மொபைல் பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன்!

இந்திய சந்தையில் புதிய டிமென்சிட்டி 1200 5ஜி மொபைல் பிராசஸர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

மீடியாடெக் நிறுவனம் தனது டிமென்சிட்டி 1200 பிராசஸரை அறிமுகம் செய்துவிட்டது. தற்போது இந்த பிராசஸர் இந்திய சந்தையில் வெளியாகி இருக்கிறது. வெளியீட்டை தொடர்ந்து புதிய மீடியாடெக் பிராசஸர் ரியல்மி ஸ்மார்ட்போனில் முதலில் வழங்கப்படுகிறது.

இதனை ரியல்மி டீசர் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்திய சந்தையில் ரியல்மி விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர் கொண்டிருக்கும்.

புதிய மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர் 6 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது 3 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் ஆக்டா-கோர் சிபியுக்களை கொண்டுள்ளது. இது முந்தைய தலைமுறை பிராசஸரை விட 22 சதவீதம் அதிவேக சிபியு திறன் வழங்கும்.

இதனுடன் ARM மாலி – G77 MC9 GPU, 6 கோர் மீடியாடெக் APU 3.0 வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஏஐ அம்சங்கள், அசத்தலான டிஸ்ப்ளே, அதிவேக ரிப்ரெஷ் ரேட், கேமிங் என பல்வேறு அம்சங்களை வழங்குகிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!