கூகுள் நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தியர்கள் பற்றி வெளி வந்த சுவாரஸ்ய தகவல்..!


இந்தியர்களின் மில்லியன் கணக்கிலான குட்மார்னிங் மெசேஜால் இன்டர்நெட் நிரம்பி வழிகிறது என கூகுள் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பண்டிகைகள் மட்டுமின்றி தங்களது பிறந்தநாள், திருமண நாள் உள்ளிட்ட பல்வேறு தினங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வது வழக்கம். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தங்களது வாழ்த்துக்களை வாழ்த்து அட்டைகளில் தெரிவித்து வந்தனர்.

கால மாற்றத்தை தொடர்ந்து, படிப்படியாக இணைய தளங்கள் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். முதலில் மெயிலில் அனுப்பப்பட்ட வாழ்த்துக்கள் தற்போது ஸ்மார்ட்போன் வருகையால் மிகவும் எளிதாக மாறியுள்ளது.

உள்நாடு மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ளவர்களுக்கு இருக்கும் இடத்தில் இருந்தே வாழ்த்துக்கள் அனுப்புவதை அனைவரும் விரும்பி செய்து வருகின்றனர்.

ஸ்மார்ட்போன்கள் மூலம் பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் சொல்வது மட்டுமின்றி, குட்மார்னிங் உள்பட பல்வேறு மெசேஜ்களும் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் சிலிகான்வாலி பகுதியை சேர்ந்த கூகுள் நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில் வெளியான சுவாரஸ்ய தகவல்களின் விவரம் வருமாறு;


உலகளவில் மூன்றில் ஒரு பங்கு ஸ்மார்ட்போனை பயன்படுத்துபவர்கள் இந்தியர்கள். இந்தியர்கள் அனுப்பும் மில்லியன் கணக்கிலான குட் மார்னிங் மெசேஜால் இண்டர்நெட் நிரம்பி வருகிறது.

சூரியகாந்தி மலர்கள், பறவைகள் மற்றும் மறையும் சூரியன் என பல்வேறு படங்களை இந்தியர்கள் அனுப்பி வருகின்றனர். ஒவ்வொரு இந்தியரும் தங்களது காலை பொழுதை வாழ்த்துக்கள் சொல்வதுடன் தொடங்கி வருகின்றனர்.

மனதை குளிர்விக்கும் செய்திகள், தன்னம்பிக்கையை கொடுக்கும் கதைகள், அழகான கவிதைகள் என அனைத்தும் இந்த குட் மார்னிங் மெசேஜில் அடங்கும்.

காலை 8 மணிக்குள் பல மில்லியன் கணக்கிலான குட்மார்னிங்குகளை தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் குட்மார்னிங் மெசேஜ் அனுப்புவது படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது. பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒவ்வொரு மாதமும் 200 மில்லியன் இந்தியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த புத்தாண்டின் முதல் நாளில் உலகிலுள்ள மற்ற நாடுகளை விட இந்தியர்கள் தான் 20 பில்லியன் புத்தாண்டு வாழ்த்து செய்திகளை வாட்ஸ் அப்பில் பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.-Source: maalaimalar

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/2rYY05