சாப்பிட்டு, சாப்பிட்டு நடக்க முடியாமல் திணறிய குரங்கு..!

சாப்பிட்டு சாப்பிட்டு உடல் எடை கூட நடக்க முடியாமல் அவதிப்பட குரங்கை வனத்துறையினர் மீட்டனர்.

தாய்லாந்தில் பாங்காங் நகரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மின்பூரி மாவட்டத்தில் அமைந்துள்ள சந்தை ஒன்றில் குரங்கு ஒன்று சுற்றி வந்துள்ளது. சந்தை என்பதால் பொதுவாக அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் மக்கள் கூட்டம் அதிகமான இடத்தில் இருந்த அந்த குரங்கு, மக்கள் தரும் உணவுகளை சாப்பிட்டு சாப்பிட்டு உடல் எடை கூடியுள்ளது.

ஒருகட்டத்தில் 20 கிலோவரை உடல் அதிகரிக்க, அந்த குரங்கினாள் நடக்க கூட முடியவில்லை. இதனால் பெரிதும் அவதிப்படுவந்த அந்த குரங்கு குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து குரங்கு இருக்கும் இடத்திற்கு வந்த வனத்துறையினர் அந்த குரங்கை சோதனை செய்தபோது, தற்போது மூன்று வயதாகும் அந்த குரங்கானது வழக்கமான எடையை விட ஒரு மடங்கு அதிகமாக இருந்ததை கண்டறிந்தனர்.

இதனை அடுத்து குரங்கை பிடித்த வனத்துறையினர் தேசிய பூங்காவுக்கு அனுப்பித்துள்ளனர். அங்கு குரங்கிற்கு உணவு கட்டுப்பாடு மற்றும் நடைப்பயிற்சி வழங்கப்பட்டு உடல் எடை சீரனாதும் காட்டுக்குள் விடப்படும் என கூறியுள்ளனர்.- source: spark * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!