ஃபார்மில் திரும்ப வரும் நோக்கியாவில் இத்தனை கேமராக்களா?


ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் வரைபடங்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது. நோக்கியா ஸ்மார்ட்போன்களில் வழக்கமான அம்சங்களை விட கேமரா மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக இருந்து வருகின்றன.

அந்த வகையில் ஐந்து கேமரா லென்ஸ் பிரைமரி கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல் இணையத்தில் வெளியான நிலையில், புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் வரைபடம் இணையத்தில் கசிந்துள்ளது. தற்சமயம் வெளியாகியிருப்பது ப்ரோடோடைப் வடிவமைப்பு தான் என்றும் இந்த ஸ்மார்ட்போனினை ஃபாக்ஸ்கான் உருவாக்கி தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஃபாக்ஸ்கான் ஊழியர் மூலம் கசிந்திருக்கும் வரைபடத்தில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் 5 லென்ஸ் வழங்கப்பட இருக்கிறது. புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் 1-1-3 என்ற வகையில் கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் எல்இடி பிளாஷ் மற்றும் வட்ட வடிவில் மர்ம சென்சார் வழங்கப்படுகிறது.


இதன் கைரேகை சென்சார் கேமராவின் கீழ் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வரைபடத்தின் மூலம் ஹெச்.எம்.டி. குளோபல் தனது புதிய ஸ்மார்ட்போனில் வளைக்கும் தன்மை கொண்ட சூம் கேமரா தொழில்நுட்பம் வழங்கும் என்றும் இதனை செய்ஸ் (Zeiss) நிறுவனம் வழங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தயாரிப்பு பணிகளில் இருக்கும் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சார்ந்த விரிவான தகவல்கள் 2018-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. மேலும் புதிய ஸ்மார்ட்போனில் 18:9 ரக டிஸ்ப்ளே, முன்பக்கம் மற்றும் பின்புறம் கிளாஸ் பாடி வடிவமைப்பு கொண்டிருக்கலாம்.

இதுவரை வெளியாகி இருக்கும் மற்ற நோக்கியா ஸ்மார்ட்போன்களை விட புதிய ஸ்மார்ட்போனின் தோற்றம் வித்தியாசமாக இருக்கும். அதிநவீன அம்சங்கள் நிறைந்த புதிய ஸ்மார்ட்போன் நோக்கியா 10 என அழைக்கப்படலாம் என்றும் இதில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் விரைவில் நோக்கியா 9, நோக்கியா 7 பிளஸ், நோக்கியா 1 மற்றும் சில நோக்கியா மொபைல் போன்களை நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. – Source: maalaimalar.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/2rYY05