“செவ்வாய் கிரகத்திற்கு சென்ற விண்கலம்” -வீட்டிலிருந்தே கட்டுப்படுத்தும் நிபுணர்.!!


வீட்டிலிருந்தே செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பட்ட விண்கலத்தை நிபுணர் ஒருவர் கட்டுப்படுத்தி வருகிறார்.

செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் என்ற விண்கலத்தை லண்டனில் உள்ள வீட்டில் அமர்ந்து கொண்டு கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார் ஒருவர். அவர் தான் சஞ்சீவ் குப்தா. இவர் 1965 ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்தார். அதற்கு பிறகு ஐந்து வயதாக இருந்தபோது பிரிட்டனுக்கு அவர் குடிபெயர்ந்து விட்டார். பின்னர் இம்பீரியல் கல்லூரியில் புவி அறிவியல் நிபுணராக குப்தா பணியாற்றிவருகிறார்.

இந்நேரத்தில் அவர் கலிபோர்னியாவில் உள்ள நாசா ஆய்வகத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால் கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் அவரது பயணம் தடைசெய்யப்பட்டது. அதனால் அவர் லண்டனில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு தங்கி கொண்டு தனது வேலையை தொடர்ந்து வருகிறார். இரவு பகல் என்று பாராமல் வேலை செய்ய வேண்டும் என்பதால் தனது மனைவி மற்றும் குழந்தைகளின் தூக்கம் கெடும் என்று நினைத்தவர் தனி குடியிருப்பை வாடகைக்கு எடுத்துள்ளார்.

பெர்சவரன்ஸ் விண்கலத்தில் குப்தாவின் வேலை என்னவென்றால், செவ்வாய் கிரகத்தில், விண்கலம் எந்த இடத்தில் உள்ள மண்ணை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் குழுவில் அவர் உள்ளார். அப்படி அந்த விண்கலம் சேகரித்து பூமிக்கு அனுப்பும் அந்த மண் மாதிரிகளை பரிசோதித்து செவ்வாய் கிரகம் உயிர்கள் வாழ தகுதியானது தானா? என்பதை குப்தா ஆராய்வார்.- source: seithisolai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!