17 வயது சிறுமி அசத்தல்.. டிக் டாக்குக்கு பதிலாக ‘தீக் தக்’ APP அறிமுகம்..!


சீனாவின் TikTok App-ஐ போன்று “dheek thaak” என்ற புதிய App-ஐ இங்கிலாந்தில் வசிக்கும் 17 வயது இந்திய சிறுமி உருவாக்கியுள்ளார்.

சீனாவின் TikTok உள்ளிட்ட பல்வேறு மொபைல் App-களுக்கு இந்திய அரசு இந்தியாவில் தடை விதித்துள்ளது. இதனால், TikTok பயன்பாட்டாளர்கள் பெரிதும் கவலை அடைந்தனர். அவர்களது தேவைகளை பூர்த்தி செய்ய புதிய App-கள் அறிமுகப்படுத்தப்பட்டு வந்தன. அந்த வரிசையில், “dheek thaak” புதிய வரவாக அமைந்துள்ளது.

இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 வயது சிறுமி Saina Sodhi இதனை உருவாக்‍கியுள்ளார். தற்போது, தீக் தக் ஆப்-ஐ ஆன்ட்ராய் மற்றும் ஐ.ஓ.எஸ் தளங்கள் மூலம் பதிவிறக்கம் செய்ய முடியும். இதில் சிறு வீடியோக்களை அப்லோடு செய்து, அதை வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ஷேர் செய்ய முடியும்.- source: daily.tamilnadu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!