குகையில் தானாக ஊற்றெடுக்கும் தண்ணீர்.. 300 அடி உயரத்தில் விசித்திர கோவில்..!


பொதுவாக கோவில் என்பது மக்கள் செல்வதற்கு வசதியாக பொதுவான இடம் ஒன்றில் அமைந்திருக்கும். அதேபோல் முருகன் உள்ளிட்ட சில கடவுள்களின் கோவில்கள் மலை உச்சியில் அமைந்திருக்கும். ஆனால் மலை உச்சியில் மார்பளவு தண்ணீருக்கு மத்தியில் கடவுள் இருப்பதை பார்த்திருக்கிறீர்களா?…

இதோ… அப்படியொரு கோவில் கர்நாடகாவில் உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மணிச்சூழ மலையில் உள்ளதுதான் ஜர்னி நரசிம்மர் குகை கோவில்.

பலநூறு ஆண்டுகளாக இந்த கோவிலில் குடிகொண்டிருக்கிற நரசிம்மரை பார்ப்பதென்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

நம்மை அச்சுறுத்தும் வகையில், ஆங்காங்கே வௌவ்வால்கள் தொங்கிக்கொண்டிருக்கும் 300 அடி உயரத்தில் உள்ள ஒரு குகையில், மார்பளவு தண்ணீரை கடந்து போனால் தான் இங்குள்ள நரசிம்மரை நம்மால் தரிசிக்கவே முடியும்.

இந்த குகையில் தானாக ஊற்றெடுத்து தண்ணீர் வந்துகொண்டே இருக்கும். இந்த தண்ணீரில் பல மூலிகைகளின் சக்திகள் கலந்து இருப்பதால், இதில் நடந்து சென்றால் பல தீராத வியாதிகளும் தீரும்.

இந்த குகையின் முடிவில் ஒரு சிவலிங்கமும் நரசிம்மர் சிலையும் உள்ளது. இந்த நரசிம்மர் சுயம்புவாகத் தோன்றியது என்று கூறப்படுகிறது.

நரசிம்மரை தரிசிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு, கடினமான பாதைகளைக் கடந்து செல்லும் பக்தர்களுக்கு மட்டுமே நரசிம்மரின் பரிபூரண அருள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.-
Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!