உங்க பரட்டை தலையை எப்படி சரிசெய்வது..? இப்படி செய்து பாருங்க..!


அழகான தோற்றத்தைத் தருவதில் தலைமுடிக்கு முக்கியமான பங்குண்டு. ஒவ்வொருவருக்கும் தலைமுடி என்பது நிச்சயமாக வரப்பிரசாதம் தான். பெரும்பாலான ஆண்கள் கட்டுக்கடங்காத நீண்ட தலைமுடியை விரும்புவதில்லை. அதைப் பராமரிப்பதும் எரிச்சலான விஷயம் தான். அதிகமாகவும் இல்லாமல், கொஞ்சமாகவும் இல்லாமல் இளவாக அதேசமயம் ஸ்டைலாக இருக்க வேண்டுமென்றே விரும்புகிறார்கள்.

ஆசைப்பட்டால் மட்டும் போதாது. அதற்காக கொஞ்சம் மெனக்கெடவும் வேண்டுமே… கண்ணாடி முன்னால் போய் நின்று கொஞ்சம் உங்கள் தலையைப் பாருங்கள். அந்த கட்டுக்கடங்காத முடியை எப்படி சரிசெய்யலாம் என யோசியுங்கள் போதும்.


சுருள் முடி

உங்கள் தலைமுடி சுருளாக இருந்தாலும் மிக இறுக்கமாக இருக்கிறதா? நிச்சயம் உங்கள் தலைமுடி ஒரு இஞ்ச் அல்லது அரை இஞ்ச் நீளத்துக்கு உள்ளாகத்தான் இருக்கும். அது உங்கள் முகத்தின் பொலிவையே கெடுத்துவிடும். அதனால் முடி வெட்ட சலூன் செல்லும்போது, இரண்டு அல்லது மூன்று லேயர்கள் வரை தலைமுடியை சற்று உயர்த்தி ஸ்டெயிட்னிங் செய்யச் சொல்லுங்கள்.


அடர்த்தியான முடி

ஒட்டுமொத்த முடியில் பாதியளவு முடியை, சிறிய மெலிதான கத்தரிக்கோல் கொண்டு வெட்டச் சொல்லுங்கள். முடி வளர வளர திரும்பவும் அதே நீளத்தைப் பராமரித்து வருவது மிக முக்கியம். நிச்சயமாக, அடிக்கடி தலைமுடிக்கு மாய்ச்சரைஸர் பயன்படுத்த வேண்டும். தினமும் வெளியில் சென்று வந்தவுடன், மாலை நேரங்களில் நல்ல ஹெர்பல் ஹேர் ஆயில் கொண்டு மசாஜ் செய்வது அவசியம்.


சொரசொரப்பான முடி

உங்கள் தலைமுடியை கையில் தொட்டுப் பார்க்கவே எரிச்சலாக இருக்கிறதா? அடுத்த முறை ஹேர் கட் செய்யும்போது, ட்ரிம் செய்வதைத் தவிர்த்திடுங்கள். கத்தரிக்கோல் கொண்டு முடியை வெட்டச் சொல்லுங்கள். ட்ரிம் செய்வது அழகான தோற்றத்தைத் தரும். ஆனால் அது உங்களின் சொரசொரப்பான தலைமுடியை சரி செய்யாது. நல்ல மாய்ச்சரைஸரும் ஹேர் சீரமும் பயன்படுத்துங்கள். தலைமுடி சொரசொரப்புத் தன்மை நீங்கி, மென்மையாகும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!