சகல செளபாக்கியங்களும் கிடைக்க ராகு கேது பகவானுக்கு விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

ஜோதிடத்தில் நவகிரகங்களின் பெயர்ச்சி மற்றும் நம் ஜாதக கிரக அமைப்பு, திசை புத்தி பொறுத்து ஜோதிட பலன் கணிக்கப்பட்டுச் சொல்லப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொருவருக்கும் தங்கள் ஜென்ம ஜாதகத்தைப் பொறுத்து திசை புத்தி கால அளவு இருக்கும்.

ராகு பகவானுக்குரிய விரத முறை:

அப்படி ஒருவருக்கு ராகு திசை நடப்பவர்களும், ராகு தோஷம் உள்ளவர்களும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ராகு போகக் காரர். இவர் ஒருவருக்கு அனைத்தின் மீதான ஆசை வைக்க தூண்டுவார். பிரமாண்டத்தை ஏற்படுத்துவார். அவரால் ஏற்படக்கூடிய சிக்கல்களிலிருந்து மீள்வதற்காக இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதிகாலையில் எழுந்து நீராடி காளி கோயிலுக்கு சென்று அங்கு வேப்ப எண்ணெய் விளக்கு ஏற்றவும். காளி அம்மனுக்கு மந்தார மலரால் அர்ச்சனையும். உளுந்தினால் செய்யப்பட்ட ஏதேனும் ஒரு பலகாரம் நிவேதனமாக்க வைத்து வழிபடுவது நல்ல பலனைத் தரும். மேலும் கோமேதக கல்லை நாம் ஆபரணமாக அணிந்து கொள்வதோடு, நவகிரக சன்னிதியில் ராகு முன் நின்று நாம் அவருக்குரிய ராகு காயத்ரி மந்திரத்தை சொல்ல வேண்டும்.

கேது பகவானுக்குரிய விரத முறை:

ஒருவரின் ஜாதகத்தில் கேது திசை நடப்பவர்களுக்கோ அல்லது கேது நீச்சத்தில் இருந்தாலோ அவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். செவ்வாய் கிழமைகளில் அதிகாலை எழுந்து நீராடி கணபதியை வணங்கவும். விநாயகர் கோயிலுக்குச் சென்று செவ்வரலி மாலை சுவாமிக்கு சூடி, கொள்ளில் செய்யப்பட்ட கொழுக்கட்டை, மோதகத்தை நைவேத்தியமாக இறைவனுக்கு படைக்கவும்.

கேது திசை நடக்கும் காலத்தில் வைடூரிய கல் கொண்ட ஆபரணத்தை அணிந்து வரவும். நவகிரக சன்னிதியில், கேது பகவானுக்கு அருகில் நின்று அவருக்குரிய காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வரவும்.இந்த விரதம் செய்வதால் தன, தானியம், பசுக்காள் என அனைத்து செளபாக்கிய ஏற்படும்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!