60 நிமிடத்தில் 4 கிலோ அசைவ உணவு சாப்பிட்டால் ‘புல்லட் பைக்’ பரிசு


மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஓட்டலுக்கு வாடிக்கையாளர்களை இழுக்க புதிய சலுகையை உரிமையாளர் அறிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக ஓட்டல்களில் வியாபாரம் குறைந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே புறநகர் பகுதியான வாட் கான் மாவல் என்ற இடத்தில் சிவ்ராஜ் ஓட்டல் அமைந்துள்ளது.

இதன் உரிமையாளர் அதுல்வைகர். ஓட்டலுக்கு வாடிக்கையாளர்களை இழுக்க புதிய சலுகையை அறிவித்தார். இதற்காக ‘வின் எ புல்லட் பைக்’ என்ற உணவு போட்டியை நடத்தி வருகிறார்.


இந்த போட்டியில் 12 வகையான அசைவ உணவுகளை 60 நிமிடத்தில் சாப்பிட்டு முடித்துவிட வேண்டும். இந்த போட்டியில் வறுத்த மீன், வறுத்த சுர்மாய், பொம்ப்ரேட் வறுத்த மீன், சிக்கன் தந்தூரி, மட்டன் வறுவல், சிக்கல் மசாலா மற்றும் இறால் பிரியாணி ஆகிய உணவுகள் வைக்கப்பட்டுள்ளது.

இவை 4 கிலோ எடை கொண்டது. 55 பேர் ஒன்றாக சேர்ந்து சமைத்துள்ளனர். இந்த உணவின் விலை ஒரு பிளேட் ரூ.2,500 ஆகும். இந்த போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு வழங்க 5 புதிய ராயல் என்பீல்டு புல்லட் பைக்குகள் உணவகத்தின் வராண்டாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!