2021 ஆம் ஆண்டில் கவனமாக இருக்க வேண்டிய 6 ராசிக்காரர்கள்..!


2020 அனைத்து ராசியினருக்குமே சோகமான ஆண்டாகவே இருந்துவிட்டது. இது வருசமா? இல்லை தெவசமா? எனக் கேட்கும் அளவுக்கு பல முக்கியப் பிரமுகர்களும் நம்மை விட்டு பிரிந்த ஆண்டு இது. கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உலகமே இந்த ஆண்டில் நிலைகுலைந்து போனது. லட்சக்கணக்காணோர் வேலையையும் இழந்தனர்.

இப்படியான சூழலில் 2021 எப்படி இருக்கும்? என பலரும் யோசிக்கத் துவங்கியுள்ளனர். இந்த 2021ல் இந்த 6 ராசிக்காரர்கள் மட்டும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? அது யாரெல்லாம் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.


கும்பம்

வாழ்க்கை இணையோடு இப்போது இருக்கும் ஒற்றுமை அடுத்த ஆண்டு நீடிக்குமா என்பதே பெரிய சந்தேகம். அதேபோல் 2021ல் உங்கள் நண்பர்களோடு தேவையற்ற சிக்கல்கள் வரும். உறவுகளைக் காப்பது இந்த ஆண்டில் பெரிய சிக்கலாக இருக்கும்.


மகரம்

பாசம் வற்றிப்போய் உறவில் அதிக கஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. அடுத்த ஆண்டு பக்கத்திலேயே உங்கள் உறவு இருந்தாலும் நீங்கள் தனிமையை உணர்வீர்கள். கூட்டாளிகளிடம் இருந்தும் விலகி இருக்கும் சூழல் உருவாகும்.


துலாம்

அடுத்த ஆண்டு முழுவதும் தேவையற்ற விவாதத்தை தவிர்ப்பது நல்லது. உங்கள் கூட்டாளிகளோடு சில நேரம் வாக்குவாதம் எற்படும். இதனால் சண்டைவந்து பிரியும் சூழலும் ஏற்படலாம்.


சிம்மம்

இந்த ஆண்டு உங்கள் உறவைப் பேணுவதில் சிக்கல்வரும். உங்கள் வாழ்வில் மேலும், மேலும் துன்பம் தரும் விசயங்கள் நடப்பதாகத் தோன்றும். உங்கள் எதிர்காலம் பற்றி சில முடிவுகளை எடுக்கவேண்டிய நேரம் இது.

கடகம்

இந்த ஆண்டின் இறுதியில் உங்களைக் கையாள்வதே கடினமாக இருக்கும். உங்களின் மோசமான செயல்கள் கூட்டாளியிடமிருந்து உங்களை விலக்கி வைத்துவிடும். 2021 இறுதியில் உங்கள் எதிர்காலம் குறித்து கடுமையான முடிவை எடுக்க வேண்டி இருக்கும்.


மிதுனம்

யார் மீது அதீத அன்பு செலுத்தினீர்களோ அவர்களே உங்களுக்கு எதிராக திரும்பும் காலம் இது. சில கருத்துவேறுபாடுகள் உங்கள் உறவின் அன்பைக் குறைக்கும். உறவுக்காக போராடுவீர்கள். ஆனாலும் முழு தீர்வு கிடைக்காது.- source: daily.tamilnadu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!