ராத்திரி நேரத்தில் பஸ் ஸ்டாண்டை தெறிக்க விட்ட திவ்யா..!


தன் செல்போனை ஒரு போலீஸ்காரர் வாங்கி சென்றுவிட்டதால், அந்த செல்போனை தன்னிடமே திரும்ப தர வேண்டும் என்றும் இளம்பெண் ஒருவர் பஸ் ஸ்டாண்டில் ஆர்ப்பாட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை தந்துவிட்டது.

தேனி அருகே உள்ள நாகலாபுரத்தை சேர்ந்தவர் சுகந்தி.. இவருக்கு 29 வயதாகிறது.. டிக்டாக்கில் அதிக ஆர்வம் கொண்ட இவர், ஏராளமான டிக்டாக் வீடியோக்களை அதில் பதிவிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில்தான், டிக்டாக் ஆப்பை தடை செய்தனர்.. எனினும், சுகந்தியின் அந்த டிக்டாக் வீடியோக்களை தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை பகுதியை சேர்ந்த திவ்யா என்பவர் டவுன்லோடு செய்து, அதை ஆபாசமாக சித்தரித்து, மறுபடியும் சோஷியல் மீடியாவில் அப்லோடு செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் சுகந்தியின் குடும்பத்தை பற்றியும் அவதூறாக அதில் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு திவ்யாவுக்கு சிலர் உதவியதாகவும் இருந்துள்ளனர்.. இந்த வீடியோக்களை கண்ட சுகந்தி அதிர்ச்சி அடைந்து, பழனிசெட்டிபட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்துள்ளார்.

போலீசாரும் அந்த புகாரின்பேரில் விசாரணை செய்து, அதன்பேரில் திவ்யா 26, மணிகண்டன், ரமேஷ், அழகர்ராஜா, செல்வா ஆகிய 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.. இந்த வழக்கு சம்பந்தமாக திவ்யாவை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து விசாரணையும் நடத்தினர்.. பிறகு திவ்யாவை சொந்த ஜாமீனில் விடுவித்துவிட்டனர்.

இந்நிலையில் ஜாமீனில் இருந்து வெளியே வந்த திவ்யா, அன்றைய தினம் இரவே தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் முன்பு உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்… போலீசார் தன்னுடைய செல்போனை வாங்கிக் கொண்டு போய் திருப்பி தர மறுப்பதாகவும், அந்த போனை தன்னிடம் தர வேண்டும் என்றும் சொல்லி முழக்கமிட்டார்..

இதுகுறித்து தகவல் அறிந்த தேனி போலீசார் அங்கு விரைந்து வந்து திவ்யாவை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். போலீசாரை கண்டித்து இளம்பெண் திவ்யா போராட்டத்தில் ஈடுபட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை தந்துவிட்டது. (இந்த திவ்யாதான், தன் காதலன் கார்த்திக்கை தேடி டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு அலப்பறையை தந்து கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!