நடிகை சித்ராவின் தற்கொலை சந்தேகங்களுக்கு விடை கிடைக்குமா?


பாத்ரூமில் குளிக்க, ரூமை விட்டு ஏன் ஹேமந்தை சித்ரா வெளியே அனுப்பினார்? எதற்காக பட்டுப்புடவையில் தூக்கு போட்டுக் கொண்டார்? என்ற பல கேள்விகள் நடிகை சித்ரா மரணத்தில் எழுந்து வருகின்றன.

2 மாதத்துக்கு முன்பு, பதிவு திருமணம் செய்து கொண்டதால், சித்ரா தற்கொலை தொடர்பாக ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே சித்ரா மரணம் குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அக்டோபர் மாதம் 24-ம் தேதி ரிஜிஸ்டர் திருமணம் நடந்துள்ள நிலையில், தனியாகத்தான் அந்த ஓட்டலில் தங்கி வந்துள்ளாராம் சித்ரா.. கடந்த 4-ம் தேதியில் இருந்துதான், ஹேமந்த் அங்கு வந்து தங்கினாராம்.. அப்போது முதல் ஒரே ரூமில் தங்கியிருந்து ஷூட்டிங்கிற்கு அழைத்து சென்று வந்ததே ஹேமந்த்தானாம்.. இப்படி ஒரே ரூமில் 2 பேர் தங்கியிருந்தபோதும், குளிப்பதற்காக ஹேமந்த்தை சித்ரா வெளியே அனுப்பியதாக சொல்லப்படுவதுதான் சந்தேகத்தை களிப்புகிறது.

பட்டுப்புடவை

அப்படி என்றால், சித்ரா ஒவ்வொரு முறை குளிக்கும்போதெல்லாம் ஹேமந்த்தை ரூமைவிட்டு வெளியேற்றினாரா? என்ற கேள்விகளும் எழுகின்றன. சித்ராவை சடலமாக மீட்டபோது, ஹேமந்த்துடன் ஓட்டல் ஊழியர் கணேசன் என்பவரும் இருந்தாராம்.. இதை ஹேமந்த் போலீசில் தெரிவிக்கவும், கணேசனிடமும் விசாரணை தற்போது நடந்து வருகிறது. அதுமட்டுமல்ல, சித்ரா தன்னுடைய பட்டுப்புடவையில் தூக்கு போட்டு கொண்டுள்ளாராம்.. இதுவும் குழப்பமாக உள்ளது.

தொழிலதிபர்

ஹேமந்த் ஒரு தொழிலதிபர் என்றாலும், அவருக்கு கொரோனா பிரச்னையால் பொருளாதார சிக்கல்கள் இருந்தன. இது மாதிரி சூழலில் சித்ராதான் அவருக்கு உதவி செய்துள்ளதாக தெரிகிறது.. ஹோட்டலில் அனைவரும் இருந்தபோதே இவர் ஏன் சித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்பதும் குழப்பமாக உள்ளது..

மனக்கசப்பு

சித்ரா நடிப்பது ஹேமந்த் குடும்பத்துக்கு பிடிக்கவில்லை என்கிறார்கள்.. அதனாலேயே மனக்கசப்பும் பலமுறை வந்துள்ளது.. அதனால், நிச்சயதார்த்தம் நடந்துவிட்ட பிறகும் இந்த கல்யாணம் பற்றின குழப்பம் சித்ராவுக்கு இருந்ததாக அவருக்கு நெருக்கமான நண்பர்கள் சொல்கிறார்கள். இந்த சமயத்தில்தான் சீரியலில் நடித்த அந்த முத்தக்காட்சி தொடர்பான சர்ச்சையும் வீட்டில் எழுந்துள்ளது.. மேலும் கல்யாணத்துக்கு தேதி குறிப்பதிலும் பிரச்சனை வந்துள்ளது.. இது தொடர்பான பேசத்தான் ஹேமந்த் வீட்டினர் பூந்தமல்லி ஹோட்டலுக்கு வந்ததாகவும் சொல்கிறார்கள்.

அம்மா

இதனிடையே இவர்கள் பதிவு திருமணம் செய்து கொண்ட ஆவணத்தை போலீசார் கோரியுள்ளனர்.. மேலும் சித்ரா கலந்து கொண்ட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே மகளின் மரணம் குறித்து., சித்ராவின் அப்பா போலீசில் புகார் தந்த நிலையில், சித்ராவின் அம்மா நிலைகுலைந்து போயுள்ளார்.. தன் மகள் வலிமையான மனநிலை கொண்டவள், அவளது மரணத்தில் சந்தேகம் உள்ளது என்றும் போலீசார்தான் இது சம்பந்தமாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!