ஷுரடியில் நீர் கால் வைத்த அக்கணமே உம்முடைய துன்பத்திற்கு முடிவேற்பட்டுவிட்டது..!


பக்தர்களுக்கு அனுக்கிரஹமும் உபதேசமும் அளிப்பதில் பாபாவினுடைய சாமர்த்தியம் அலாதியானது. அதை அவர் பல வழிமுறைகளில் செய்தார். அவர்கள் அருகிலிருந்தாலும் சரி, வெகுதூரத்திலிருந்தாலும் சரி, பாபா இருதயவாசியாக பக்தர்களுடனேயே இருந்தார்.கவலையை விட்டொழியும், உறுதியுடன் இரும், என் பக்தர்கள் துக்கப்படுவதில்லை. ஷிர்டியில் நீர் கால் வைத்த அக்கணமே உம்முடைய துன்பத்திற்கு முடிவேற்பட்டுவிட்டது. நீர் தடங்கல்களெனும் கடலில் கழுத்துவரை மூழ்கியிருக்கலாம், துக்கமும் வேதனையுமாகிய படுகுழியில் ஆழமாக அமிழ்ந்து போயிருக்கலாம். ஆனால், யார் இந்த மசூதிமாயியின் படிகளில் ஏறுகிறாரோ, அவர் சுகத்தின் மீது சவாரி செய்வார் என்று அறிந்து கொள்ளும்.

பொறுமையும் சகிப்புத்தன்மையுமே தைரியம். அதைத் தொலைத்து விடாதீர்கள். எப்பொழுது பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் அது உங்களை கரைசேர்க்கும். சகிப்புத்தன்மை இல்லாத மனிதனின் நிலைமை பரிதாபகரமானது. பண்டிதராக இருந்தாலும் சரி, நற்குணம் படைத்தவராக இருந்தாலும் சரி, சகிப்புத்தன்மை இல்லாவிடில் வாழ்க்கை வீணாகிவிடும். குரு மஹாபலம் படைத்தவராக இருக்கலாம். ஆயினும், ஆழமாகப் பாயும் நுண்ணறிவையும் தம்மிடம் அசையாத நம்பிக்கையையும் சகிப்புத்தன்மையின் துணிவான பலத்தையும் தம் சிஷ்யனிடமிருந்து எதிர்பார்க்கிறார் சாய்பாபா. அடிமைகளுக்கு அடிமையாகிய நான் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். உங்களுடைய தரிசனத்தை நாடுகிறேன்.

உங்களுடைய மஹா கருணையினால் தான் நான் உங்களை சந்திக்க நேர்ந்தது. நான் அழைக்காமல் எவரும் ஷிர்டி வருவதில்லை. நம்முடைய எண்ண ஓட்டங்கள் அனைத்தும் சாயியின் ஆதீனத்தில் இருக்கின்றன. அவருடைய சித்தத்தில் கிருபை உதித்தால் தான் எவரும் தரிசனத்திற்கு வரமுடியும். ஒருவருக்கு இணையில்லாத புத்திசாதுர்யம் இருக்கலாம். ஆடாத அசையாத சிரத்தையும் இருக்கலாம். ஆயினும் சாயியைப்போன்ற பலமான குரு அமைவதற்கு தெய்வபலம் அவசியம் வேண்டும். யார் என்னை பெரிதும் நேசிக்கிறாரோ அவருடைய பார்வையில் இடைவிடாது இருக்கிறேன். நான் இல்லாது அவருக்கு இவ்வுலகம் சூனியமாகத் தெரியும். அவருடைய வாயிலிருந்து என்னுடைய பெருமை மட்டுமே வெளிவரும்.-Source: dinakaran

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!