ஸ்மார்ட்போன்களில் இனி இண்டர்நெட் தேவையில்லை.. அதிரடி ஹைக் டோட்டல்..!


ஹைக் நிறுவனத்தின் டோட்டல் எனும் புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை கொண்டு மெசேஜிங், செய்திகள் மற்றும் ரீசார்ஜ் உள்ளிட்டவற்றை இண்டர்நெட் இணைப்பின்றி பயன்படுத்த முடியும்.

ஹைக் டோட்டல் சேவை முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட சில ஸ்மார்ட்போன்களில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் ரூ.1 முதல் துவங்குகிறது. இந்த சேவை USSD-சார்ந்த தொழி்ல்நுட்பத்தை கொண்டு இயங்குவதால் மெசேஜிங் மற்றும் இதர சேவைகளை இயக்க முடியும்.

மார்ச் 1-ம் தேதி முதல் தேர்வு செய்யப்பட்ட இன்டெக்ஸ் மற்றும் கார்பன் நிறுவன ஸ்மார்ட்போன்களிலும் ஏர்டெல், ஏர்செல் மற்றும் பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட நெட்வொர்க்களில் ஹைக் டோட்டல் சேவையை பயன்படுத்தலாம். மேலும் ஹைக் டோட்டல் வாடிக்கையாளர்களுக்கு டோட்டல் சேவையை பயன்படுத்த ரூ.200 வழங்கப்படுகிறது.


முன்கூட்டியே இந்த சேவையை பயன்படுத்த விரும்புவோர் பிரத்யேக ஹைக் டோட்டல் வலைத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். முழுமையான என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட ஹைக் டோட்டல் சேவையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் போன் நம்பர் கொண்டு ஒருமுறை லாக்-இன் செய்தாலே போதுமானது.

தற்சமயம் வரை ஹைக் டோட்டல் சேவைகளில் மெசேஜிங், செய்திகள், ரீசார்ஜ், ஹைக் வாலெட்டில் இருந்து பண பரிமாற்றம் செய்வது, கிரிக்கெட் நிலவரம், ரெயில் சார்ந்த தகவல்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியும். மேலும் இத்தகைய சேவைகள் அனைத்தையும் பயன்படுத்த அதிகபட்சம் 100 கே.பி. முதல் 1.0 எம்.பி. வரையிலான டேட்டா மட்டுமே போதுமானது.

ஹைக் டோட்டல் வழங்கும் அனைத்து சேவைகளையும் ப்ரோபரைட்டரி தொழில்நுட்பம் (Proprietary Technology) மூலம் பயன்படுத்த முடியும். ஹைக் பொறியாளர்கள் உருவாக்கியிருக்கும் இந்த தொழில்நுட்பம் USSD ப்ரோடோகால் மூலம் இயங்குவதால் என்க்ரிப்ஷன், டேட்டா கம்ப்ரெஷன் மற்றும் டிரான்ஸ்மிஷன் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!