ஒப்போ நிறுவனத்தின் ஃபேஸ் அன்லாக் வசதி கொண்ட புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்..!


ஒப்போ நிறுவனத்தின் புதிய A சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ A83 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்.டி.+ ஃபுல் ஸ்கிரீன் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P23 சிப்செட் மற்றும் 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. முகத்தில் உள்ள 200 முக அங்கீகார ஸ்பாட்களை கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.

ஒப்போ A83 சிறப்பம்சங்கள்:

– 5.7 இன்ச் 1440×720 பிக்சல் 18:9 ஹெச்.டி.+ ஃபுல்-ஸ்கிரீன் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P23 சிப்செட்
– மாலி G71 MP2 GPU
– 3 ஜிபி ரேம்
– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீ்ட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் சார்ந்த கலர் ஓ.எஸ். 3.2
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.2 அப்ரேச்சர்
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2 அப்ரேச்சர்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3180 எம்ஏஎச் பேட்டரி

இந்தியாவில் கருப்பு மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கும் ஒப்போ A83 ஸ்மார்ட்போன் ரூ.13,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளத்தில் ஜனவரி 20-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!