இனி இந்த வசதியும் வந்துவிட்டது… புதிய அப்டேட் வழங்கிய வாட்ஸ்அப்!


வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய அப்டேட் அந்த வசதியையும் வழங்குகிறது.

வாட்ஸ்அப் செயலியில் ஷாப்பிங் பட்டன் வசதியை பேஸ்புக் நிறுவனம் தனது அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த வசதி இந்தியா உள்பட பல்வேறு இதர நாடுகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.

ஷாப்பிங் பட்டன் வசதியில் சாட் செய்வதை போன்றே பொருட்களை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். மேலும் இந்த அம்சம் பயனர்கள் வியாபாரங்கள் வழங்கும் பொருட்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளவும் வழி செய்கிறது.


முன்னதாக இதுபோன்ற அம்சத்தை இயக்க பயனர்கள் அந்தந்த வியாபாரங்களின் பிஸ்னஸ் ப்ரோபைலை க்ளிக் செய்ய வேண்டிய நிலை இருந்து வந்தது. தற்சமயம் ஷாப்பிங் பட்டனை பார்த்ததும், பயனர்கள் க்ளிக் செய்து குறிப்பிட்ட வியாபார பொருட்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

இந்த அம்சம் பயனர்கள் மட்டுமின்றி வியாபாரங்கள் தங்களின் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவியாக இருக்கும். இதன் மூலம் விற்பனை அதிகரிக்கும்.

புதிய ஷாப்பிங் பட்டன் வாட்ஸ்அப் பிஸ்னஸ் அக்கவுண்ட் சாட் ஸ்கிரீன்களில் மட்டுமே காணப்படும். அந்த வகையில், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சாட் ஸ்கிரீனில் ஷாப்பிங் பட்டன் இடம்பெறாது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!