எந்த நேரத்தில் எந்த மலரை பூஜைக்கு பயன்படுத்தலாம்..?


ஒவ்வொரு வேளை பூஜைக்கும் ஒரு சில மலர்கள் மிகவும் விசேஷம் என்பார்கள். அந்த வகையில் எந்த நேரத்தில் எந்த மலரை பூஜைக்கு பயன்படுத்தலாம் என்று அறிந்து கொள்ளலாம்.

அதிகாலை பூஜைக்கு உரியவை — புன்னை, வெள்ளெருக்கு, செண்பகம், நந்தியாவட்டம், நீலோற்பவம், அலரி, செந்தாமரை .

காலை பூஜைக்கு உரியவை — அலரி, நாயுருவி, மல்லிகை, எருக்கு, வில்வம், நந்தியாவட்டம், தாமரை, பவளமல்லி .

உச்சிகாலத்துக்கு உரியவை — பொன் ஊமத்தை, புலிநகக் கொன்றை, பாதிரி, வன்னி, கத்திரி, மந்தாரை, சரக்கொன்றை, துர்மை .

மாலைக்கும் அர்த்த ஜாமத்திற்கும் உரியவை — மல்லிகை, காட்டுமல்லி, மரமல்லி, மகிழ், கொன்றை, செண்பகம், சிறு செண்பகம், மரிக்கொழுந்து.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!