தை அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் ஏன் கொடுக்க வேண்டும் தெரியுமா..?


தை அமாவாசையை முன்னிட்டு தமிழகம் முழுவதும், ஏராளமான மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர்.

மகர ராசியில் இருக்கும் சூரிய பகவானோடு திங்கள் சேரும் நாளே தை அமாவாசை. இன்று கடைப்பிடிக்கப்படும் அமாவாசை, உத்தராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை எனக் குறிப்பிடப்படுகிறது. இந்நாளில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கோடியக்கரை, குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட புனித தலங்களில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது.


தடைபட்ட திருமணம், வேலையின்மை, நீண்ட நாள்பட்ட நோய்நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும், மனநிறைவும் கிடைக்கும். அன்று பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது இன்னும் நல்ல பலன் தரும்.

அதன்படி தை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு புனித ஸ்தலங்களில், ஏராளமான மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரயில், பேருந்து, கார், வேன்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று ராமேஸ்வரத்தில் குவிந்துள்ளனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமாக் இருக்க 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!