சியோமி நிறுவனத்தை எதிர்கொள்ள சாம்சங் புதிய அதிரடி திட்டம்..!


இந்தியாவில் கால் பதித்த மூன்றே ஆண்டுகளில் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற விலையில் பல்வேறு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ததே இந்த அசுர வளர்ச்சிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

மிக குறுகிய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனத்தை எதிர்கொண்டு முன்னணி இடத்தை பிடித்திருக்கும் சியோமியை சமாளிக்க கொரிய நிறுவனம் புதிய திட்டம் தீட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் சியோமி போன்றே ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்ய பிரத்யேக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய சாம்சங் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் ஆன் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே பிளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைத்தளங்களில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.


ஆன்லைனில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் போது, விற்பனையாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை சேமிப்பதோடு ஸ்மார்ட்போனின் விலையை குறைத்து விற்பனை செய்ய முடியும். மேலும் ஆன்லைன் விற்பனையாளர்கள் எண்ணிக்கை 10-12 இல் இருந்து 2 அல்லது 3 ஆக குறைத்திருக்கிறது.

சாம்சங் வெளியிட இருக்கும் ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே கொண்ட கேலக்ஸி A8 பிளஸ் ஸ்மார்ட்போனினை சாம்சங் நிறுவனம் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்கிறது. புதிய கேலக்ஸி A8 பிளஸ் இந்தியாவில் சியோமி Mi மிக்ஸ் 2 மற்றும் ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!