களமிறங்குகிறது கைரேகை ஸ்கேனர் கொண்ட பட்ஜெட் ரக பானாசோனிக்…!


இந்தியாவில் பானாசோனிக் நிறுவனத்தின் எலுகா I5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4ஜி வோல்ட்இ, கைரேகை ஸ்கேனர் கொண்ட புதிய ஸ்மார்ட்போனின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். பானாசோனிக் நிறுவனத்தின் எலுகா I5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

13 எம்பி பிரைமரி கேமரா, 4ஜி வோல்ட்இ, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட அம்சங்களுடன் 5.0 இன்ச் எச்டி 2.5D வளைந்த கிளாஸ் ஸ்கிரீன் மற்றும் அசாஹி டிராகன் டிரெயில் கிளாஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. மெட்டல் பாடி வடிவமைப்பு, மீடியாடெக் பிராசஸர், ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்டுள்ளது.


பானாசோனிக் எலுகா I5 சிறப்பம்சங்கள்:

– 5.0 இன்ச் 1280×720 பிக்சல் எச்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, அசாஹி டிராகன் டிரெயில் கிளாஸ்
– 1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6737 பிராசஸர்
– 2 ஜிபி ரேம்
– 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
– 5 எம்பி செல்ஃபி கேமரா
– ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம்
– கைரேகை ஸ்கேனர்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 2500 எம்ஏஎட் பேட்டரி

கருப்பு மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கும் பானாசோனிக் எலுகா I5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.6,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய பானாசோனிக் ஸ்மார்ட்போன் பிரத்தியேகமாக பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!