‘அமேசான்’ தலைவரின் முன்னாள் மனைவி முதலிடம்… இத்தனை கோடி சொத்துக்களா..?


உலக பணக்கார பெண்கள் பட்டியலில் ‘அமேசான்’ தலைவரின் முன்னாள் மனைவி முதலிடம் பிடித்துள்ளார். விவாகரத்து மூலம் கிடைத்த பணத்தால் இந்த இடம் கிடத்துள்ளது.

2020-ம் ஆண்டுக்கான உலக பணக்கார பெண்கள் பட்டியலை ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்காவைச் சேர்ந்த மெக்கென்சி ஸ்காட் முதலிடம் பிடித்துள்ளார்.

50 வயதாகும் அவரது தற்போதைய சொத்து மதிப்பு 6 ஆயிரத்து 800 கோடி டாலராகும். இவர் ‘அமேசான்’ நிறுவன சி.இ.ஓ.-வும் உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பவருமான ஜெப் பெசோசின் முன்னாள் மனைவி ஆவார்.

மெக்கென்சி ஸ்காட் தனது கணவர் ஜெப் பெசோசுடனான 25 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து பெற்றபோது அவரிடம் இருந்த ‘அமேசான்’ நிறுவன பங்குகளில் 4 சதவீத பங்குகளை பெற்றார்.

அவற்றின் அப்போதைய மதிப்பு ரூ.3500 கோடி டாலர் ஆகும். தற்போது அந்த பங்கு மதிப்பு இரட்டிப்பு ஆகி உள்ளதால் மெக்கென்சி ஸ்காட்டின் சொத்து மதிப்பும் கணிசமான அளவு உயர்ந்துள்ளது.

விவகாரத்து மூலம் கிடைத்த பணத்தால் மெக்கென்சி ஸ்காட் பணக்கார பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ஒட்டுமொத்த பணக்காரர்களில் அவர் 12-ம் இடத்தில் உள்ளார்.

உலக பெண்கள் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த லோரியால், அழகு சாதன பொருட்கள் நிறுவனத்தின் வாரிசுதாரர் பெட்டன்கோர்ட் மேயர்ஸ் 6,600 கோடி டாலர் சொத்துடன் 2-ம் இடத்தில் உள்ளார்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!