தை பிறந்தால் வழி பிறக்கும்.. துயரங்களை போக்கும் தைமாத விரதம் பற்றி தெரியுமா..?

தைமாதம் வரும் அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமையன்று விரதம் இருந்து சிவாலய வழிபாட்டை மேற்கொண்டால் துயரங்கள் துள்ளி ஓடும்.

தை மாதம் வரக்கூடிய அமாவாசை திதியில், நமது முன்னோர்களை நினைத்து வழிபட்டால் எந்நாளும் இன்பமாக வாழலாம். வீட்டில் தடைபட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறக்கூடிய வாய்ப்பு உருவாகும்.

அந்த நாள் 16.1.2018-ல் (செவ்வாய்க்கிழமை) வருகின்றது. தை அமாவாசை வழிபாடு தடைகளைத் தகர்த்தெரியும். அன்றுதான் அபிராமிப்பட்டர் நிலவு வரவழைத்த திருநாள். நடக்காததை நடத்திக் காட்டிய நாள் அது.

மேலும் தைமாதம் வரும் வெள்ளிக்கிழமையன்று விரதம் இருந்து சிவாலய வழிபாட்டை மேற்கொண்டால் துயரங்கள் துள்ளி ஓடும். அம்பிகை ஆலயங்களில் சந்தனக் காப்பு சாற்றி வழிபட்டால் சிந்தனைகள் அனைத்தும் வெற்றிபெறும்.

இறைவனை அலங்கரித்துப் பார்த்தால் இனிய வாழ்க்கை மலரும். உடலை குளிர்ச்சியாக்கும் சந்தனத்தை அம்பிகைக்கு சாற்று வதன் மூலம் உள்ளம் குளிர்ச்சியாகி நமக்கு வேண்டும் வரம் தருவாள் அம்பிகை.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!