கொரோனாவை வென்ற 103 வயது முதியவர்… மருத்துவமனை ஊழியர்கள் நெகிழ்ச்சி..!


கேரளா மாநிலத்தில் கொரோனாவை வென்ற 103 வயது முதியவர் பூரணமாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அதுபோல், கேரளாவிலும் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த மாதம் முதல் வேகமாக உயர்ந்து வருகிறது.

மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 48 ஆயிரத்தை நெருங்குகிறது. அத்துடன் 175 பேர் உயிரிழந்துள்ளனர். அதிலும் கோரமுக கொரோனா வயதானவர்கள், கர்ப்பிணிகள் என அனைத்து தரப்பினரையும் வயது வித்தியாசம் பார்க்காமல் தனது கோரப்பிடியில் விழவைத்து வருகிறது. வயோதிகம், பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள முதியோர் கொரோனா பாதிப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் வயதானவர்கள் பொது இடங்களில் சுற்றித்திரிய வேண்டாம் என்றும், வீடுகளில் தங்கியிருக்கவும் அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில், கேரளா மாநிலத்தில் கொரோனாவை வென்ற 103 வயது முதியவர் பூரணமாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கேரளாவில் உள்ள ஆலுவா பகுதியை சேர்ந்த பரீத் என்ற 103 வயது முதியவர், கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி எர்ணாகுளம் கலமசேரி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது அவர் சிகிச்சை முடிந்து கொரோனாவில் இருந்து மீண்டார். இதைத் தொடர்ந்து பரீத் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பும் பரீதுக்கு மலர்க்கொத்து கொடுத்து மருத்துவமனை ஊழியர்கள் வழியனுப்பி வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!