மாலியில் பதற்றம்… ராணுவ புரட்சி… அதிபர் இப்ராஹிம் ராஜினாமா..!


மாலியில் அரசு நிர்வாகத்தை ராணுவ கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி அதிபரை கைது செய்ததையடுத்து, அதிபர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மாலி நாட்டில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளது. ராணுவ கிளர்ச்சியாளர்கள் தெருக்களில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுக்கொண்டே சென்றனர். ராணுவ டாங்கிகள் நகரத்தில் வலம் வருகின்றன. அதிபர் இப்ராஹிம் பவுபக்கர், பிரதமர் பவ் சிஸ்சே ஆகியோரை ராணுவ கிளர்ச்சியாளர்கள் கைது செய்து தலைநகர் பமாகோ அருகில் உள்ள ராணுவ முகாமிற்கு கொண்டு சென்றனர். அரசு நிர்வாகத்தையும் கைப்பற்றினர். இதனால் மாலியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், மாலி அதிபர் இப்ராகிம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தெடார்பாக அவர் தொலைக்காட்சியில் பேசும்போது, தனது தலைமையிலான ஆட்சியையும், பாராளுமன்றத்தையும் கலைப்பதாக அறிவித்தார். மேலும், நான் அதிகாரத்தில் நீடிப்பதற்காக எந்த ரத்தமும் சிந்தக்கூடாது என்று விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பள பிரச்சினை மற்றும் ஜிகாதிகளுடன் தொடர்ச்சியான மோதல் மற்றும் முன்னாள் ஜனாதிபதியுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ராணுவ வீரர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!