இறந்தவரின் பேஸ்புக் கணக்கை மீண்டும் பயன்படுத்த என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?


இறந்த ஒருவரின் பேஸ்புக் கணக்கை(facebook account) பயன்படுத்த ஆசையானவர்கள் எளிதில் பயன்படுத்த பேஸ்புக் வழிவகுத்துள்ளது.

நெருக்கமானவர்கள் இறந்தால் அவர்கள் பயன்படுத்திய பேஸ்புக் கணக்கை பயன்படுத்த பலர் ஆசைப்பட்டிருப்பார்கள். அதேபோல் பலர் அவர்களது கணக்கை திருட(ஹக்) முயற்சி செய்திருப்பார்கள். ஆனால் எதிர்வரும் காலங்களில் எளிதாக ஒரு ஈமெயில்(Email) அனுப்புவதன் மூலம் இறந்தவரின் பேஸ்புக் கணக்கை பயன்படுத்த பேஸ்புக் நிறுவனம் வழிவகுத்துள்ளது.


பேஸ்புக் நிறுவனத்திற்கு இறந்தவரின் உண்மையான விபரங்களுடன், மரண சான்றிதழையும் மீண்டும் பயன்படுத்த விரும்புபவரின் விபரங்கள் மற்றும் உறவு முறையை facebook@email.com என்ற முகவரிக்கு ஈமெயில்(Email) அனுப்பி வைப்பதன் மூலம் மீண்டும் இறந்தவரின் பேஸ்புக் கணக்கை மீண்டும் பயன்படுத்த முடியும். மேலும் கொடுக்கப்பட்ட தகவல்களில் உண்மைத்தன்மை இல்லாவிடின் பேஸ்புக் நிறுவனம் நிராகரித்து கொள்ளும். மேலும் கணக்கை மீள பயன்படுத்துவது குறித்து பேஸ்புக் நிறுவனமே முடிவுசெய்யும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.-Source: news.ibctamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!