கல்யாணமாகி சில மாதங்களிலேயே சடலமாக கிடந்த தம்பதி.. நடந்தது என்ன..?


கேரளாவில் காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதிகள் திடீரென்று தற்கொலை செய்து கொண்டனர். இது அந்த பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.

கேரளா பண்டாலம் பகுதியில் வசித்து வந்தவர் ஜிதின். இவருக்கு வயது (30). இவர் மாவெளிகரா, துளசிபவன் பகுதியில் வசித்து வந்தவர் தேவிகா தாஸ். இவர்கள் இரண்டு பேரும் காதலித்து வந்தனர். பெண்ணின் வீட்டில் இவர்கள் காதல் விசியம் தெரிந்து எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பே தேவிகா தாஸ் ஜிதினை திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறினர்.

தேவிகா தாஸ் பெற்றோர் காவல் துறையில் ஜிதின் மீது புகார் கொடுத்தனர். தேவிகா மைனர் என்பதால் போலீசார் ஜிதின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தேவிகா அவர்கள் பெற்றோருடன் செல்ல மறுத்ததால். தேவிகாக்கு திருமண வயது வரும் வரை அரசு கூறிய இடத்தில் வசித்து வந்தார். சமீபத்தில் தேவிகாவிற்கு திருமண வயது நிரம்பி விட்டதால் இருவரும் மே 6ம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பின் அவர்கள் சென்னிதளாவில் உள்ள மகாத்மா பள்ளி அருகே வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். திடீரென்று கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுமண தம்பதியினர் இருவரும் வீட்டில் தற்கொலை செய்துகொண்டனர். மேலும் ஜிதின் தூக்கிலும், தீபிகா தாஸ் படுக்கையிலும் பிணமாக இருந்துள்ளனர். போலீஸ் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்கள் இருவரது உடலையும் மீட்டு அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீஸ் வழக்குப் பதிவு செய்து எதனால் இறந்தனர் என்று அக்கம் பக்கத்தில் விசாரணை செய்து வருகின்றனர் அதில் சில பேர் ஜிதின் ஓவியர் எனவும், அவருக்கு போதிய வருமானம் இல்லாத நிலையில், கடும் சிரமங்களை சந்தித்து வந்தனர் இருவரும் அதனால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரதே பரிசோதனையில் உயிரிழந்த தேவிகா தாஸ்க்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட போலீசார் பத்து பேரை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் போலீசார்கள் தங்களுக்கு கொரோனா பரவல் இருக்குமோ என பெரும் பயத்தில் உள்ளனர்.-Source: tamyugam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!