ஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வில் அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான ஐஒஎஸ் 14


ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐஒஎஸ் 14 ஆப்பிள் 2020 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய இயங்குதளத்தின் இன்டர்ஃபேஸ் மாற்றப்பட்டு புதிய ஆப் லைப்ரரி மற்றும் புது வடிவமைப்பு கொண்ட விட்ஜெட்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஐஒஎஸ் 14 அப்டேட்டில் பிக்ச்சர் இன் பிக்ச்சர் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதை கொண்டு வீடியோக்களை திரையில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வைத்துக் கொண்டு மற்ற செயலிகளை பயன்படுத்த முடியும். இதே அம்சம் ஆண்ட்ராய்டில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் மேம்படுத்தப்பட்ட சிரி திரை முழுவதையும் ஆக்கிரமிக்காத வகையில் மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த இயங்குதளத்தில் மொழிபெயர்ப்பு சேவையை வழங்கும் டிரான்ஸ்லேட் ஆப் வழங்கப்பட்டுள்ளது. இது கூகுள் நிறுவனத்தின் கூகுள் டிரான்ஸ்லேட் சேவைக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஆப்பிள் மேப்ஸ் சேவையில் சைக்ளிங் வசதியும், இவி எனும் அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. இவி அம்சமானது எலெக்ட்ரிக் வாகனங்களில் பயணிப்போர், வாகனங்களை சார்ஜ் செய்து கொள்ளும் இடங்கள் அடங்கிய வழியை காண்பிக்கிறது. மேலும் ஆப்பிள் கார்பிளே இன்டர்ஃபேஸ் அளவில் மாற்றம் செய்யப்பட்டு, சில புதிய வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!