திடீரென ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அதிரடி அறிவிப்பு..!


இந்திய டெலிகாம் சந்தையில் நிலவி வரும் விலை போட்டி ஒவ்வொரு நாளும் சூடுபிடித்து வருகிறது. புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும் ஒவ்வொரு நிறுவனமும் புதிய திட்டங்களையும், பழைய திட்டங்களில் கூடுதல் சலுகைகளை அறிவித்து வருகின்றன.

சமீபத்தில் ஜியோ ரூ.149 திட்டத்தில் தினமும் வழங்கப்பட்டு வந்த 1 ஜிபி டேட்டா அளவு 1.5 ஜிபியாக அதிகரிக்கப்பட்டது. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி ஏர்டெல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா மற்றும் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.449 திட்டத்தில் 70 நாட்கள் வேலிடிட்டி தற்சமயம் 82 நாட்களாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 82 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.


இதேபோன்று ரூ.509 திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம் 91 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 91 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.999 விலையில் புதிய திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 50 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், இலவச ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மை இன்ஃபினிட்டி திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டிருப்பதால் புதிய மற்றும் பழைய ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் டேட்டா ரோல்ஓவர் சலுகையும் வழங்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் பயன்படுத்தாத டேட்டாவை அடுத்த மாதத்தில் பயன்படுத்த முடியும். மேலும் 50 ஜிபி டேட்டா அளவை கடந்ததும், எம்.பி ஒன்றிற்கு 50 பைசா வீதம் வசூலிக்கப்படுதிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!