பிரபலமான மீன் சந்தையில் 405 கிலோகிராம் எடை கொண்ட நீல நிற மீன்.. எங்கு தெரியுமா..?


சுமார் 405 கிலோகிராம் எடை கொண்ட, நீல நிற டூனா(Tuna)என்ற மீனை,3 லட்சத்து 23ஆயிரம் டொலர்களுக்கு அதாவது, இலங்கை ரூபாயில், 4 கோடி 96 லட்சத்து 56ஆயிரத்து 405 ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கியுள்ள சம்பவமானது, ஜப்பான் நாட்டில் இடம்பெற்றுள்ளது.

ஜப்பான் நாட்டின் சர்வதேச உணவகமான, சுஷி (Sushi) என்ற உணவகத்தின் உரிமையாளர் ஓண்டியரா என்பவரே, மேற்படி டூனா என்ற மீனை வாங்கியுள்ளார்.

இந்த நீல நிற டூனா மீன் பசிபிக் கடலில்தான் கிடைக்கும். இது சுமார் 405 கிலோ எடை கொண்டது. மிகப்பெரிய தொகை கொடுத்து இந்த மீனை வாங்கிய உணவகத்தின் உரிமையாளரைப் பற்றிய செய்திகள் ஜப்பானிய சமூக வலைதளங்களில், வெகுவாகப் பரவிவருகிறது.

இந்த மீனுக்கு மக்கள் போட்டிபோட்டு வருகின்றனர். அத்தோடு, ஜப்பானின் மிகவும் பிரபலமான மீன் சந்தையில்தான் இது கிடைக்கும். அங்கு இதைவிட அதிக விலையிலும் மீன்களும் விற்கப்படுகிறது என்பதோடு, ஜப்பானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த மீனை பார்க்காமல் செல்ல மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.-Source:news.ibctamil



* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!