சீரடி சாயி பாபாவின் நைவேத்திய பூஜை மந்திரங்கள்..!


தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றை தாம்பூலத்தில் வைத்து கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.

ஓம் பூர்புவஸ்ஸுவ:

உத்தரணியில் தீர்த்தம் எடுத்து மேற்கண்ட மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்திய தாம்பூலத்தின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.

தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்
(தீர்த்தத்தை நைவேத்தியங்களின் மேல் தெளிக்கவும்)

தேவஸவித ப்ரஸுவ ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி

(தீர்த்தத்தை நைவேத்திய தாம்பூலத்தின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

அம்ருதமஸ்து, அம்ருதோபஸ்தரணமஸி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்)

(கீழ்கண்ட ஒவ்வொரு மந்திரத்திலும் ஸ்வாஹா என்று சொன்ன பிறகு, சுவாமியின் பக்கம் கைகளால் காண்பித்து நைவேத்தியம் செய்யவும்).

ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபாயநாய ஸ்வாஹா, ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதாநாய ஸ்வாஹா, ஓம் ஸமாநாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா, ப்ரஹ்மணீம ஆத்மா அம்ருதத்வாய

ஸ்ரீ ஸாயிநாதாய நம: நாளீகேர கண்ட த்வயம், கதலீஃபலம் ஸஹிதம் மஹா நைவேத்யம் நிவேதயாமி (நைவேத்தியம் செய்யவும்)

மத்யே மத்யே பானீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)

நைவேத்யாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் 3 முறை உத்தரணியால் தீர்த்தம் விடவும்)


சுத்தமான தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, பழம் எடுத்து வைத்து கீழ்வரும் மந்திரத்தைச் சொல்லவும்.

பூகீஃபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம்
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ருதிக்ருஹ்யதாம்
ஸ்ரீ ஸாயிநாதாய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி
(தாம்பூலத்தின் மேல் தீர்த்தம் விட்டு, நைவேத்தியம் செய்யவும்.)

தீபாராதனை

ஸ்ரீ ஸாயிநாதாய நம: கற்பூர நீராஜனம் ஸந்தர்ச யாமி
(கற்பூர ஆரத்தி காட்டவும்)

ஸ்ரீ ஸாயிநாதாய நம: நீராஜநானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்) தீபாராதனைக்குப் பிறகு ஆரத்தி பாடலை பாடவும்.

ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தை சுவாமியிடம் சமர்ப்பிக்கவும்).– Source: dinakaran

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!