உதவி கேட்க கூப்பிடுறார்னு நெனச்சோம்.. முதியவர் செய்த காரியம் இருக்கே.. காவலர்கள் நெகிழ்ச்சி..!


கொல்கத்தாவை சேர்ந்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் கொரோனா நிதிக்காக 10 ஆயிரம் பணத்தை அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டிப் படைத்து வருகிறது. இந்த நிலையில் உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19 லட்சமாக உயர்ந்துள்ளது. அது போல் பலியானோரின் எண்ணிக்கை 3 லட்சமாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் பாதிப்பு அதிகம் இருப்பதால் மக்கள் நிதி அளிக்க வேண்டும் என மத்திய அரசும் அந்தந்த மாநில அரசுகளும் கேட்டுக் கொண்டுள்ளன.

கொல்கத்தாவை சேர்ந்த 82 வயதான சுபாஷ் சந்திர பானர்ஜி என்பவர் தனியார் கல்லூரியில் பேராசிரியாக இருந்து ஓய்வு பெற்றவர்.அவர் டம்டம் பகுதியில் சிறிய வீட்டில் தனியே வசித்து வருகிறார். அவர் வாங்கும் ஓய்வூதியத்தில் மருந்து மாத்திரைகள் வாங்குவார். இவர் தனது வீட்டுக்கு அருகே லாக்டவுன் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரை அழைத்துள்ளார்.

பார்ப்பதற்கு பலவீனமாக இருந்த நிலையில் அவர் ஏதோ உதவி கேட்கிறார் என போலீஸார் நினைத்தனர். உடனே அவர் வீட்டுக்கு சென்றனர். அவர்களிடம் ரூ 10 ஆயிரத்திற்கான காசோலையை நீட்டினார் அந்த முதியவர். பின்னர் இதை கொரோனா நல நிதிக்காக ஒப்படைத்துவிடுமாறு அந்த முதியவர் கேட்டுக் கொண்டார்.

எனக்கு ஆன்லைனில் பணம் செலுத்துவது எப்படி என தெரியாது. அதனால்தான் உங்களை அழைத்தேன். தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ளாதீர். என்னை மன்னித்து விடுங்கள் என்றார். அவர் கொடுத்த 10 ஆயிரத்தை விட அவரிடம் இருந்த உதவும் குணம் எத்தனை கோடிக்கும் ஈடாகாது. இவரது புல்லரிக்கும் செயலால் போலீஸார் திகைத்ததோடு அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

இவரது நல்ல மனதை அங்கிருந்த காவலர்கள் பாராட்டினர். இந்த பெரியவரின் உதவும் எண்ணம் பேஸ்புக்கில் பதிவு போட்டதால் தற்போது நாடு முழுவதும் வைரலாகி வருகிறது. மற்றவர்களும் உதவும் எண்ணத்தை ஊக்குவிக்கும்படியாக உள்ளது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!