300 வீடியோக்கள்.. ஷர்மிளாவுடன் டூயட் பாடிய உமர்.. இப்ப சார் உள்ளே ரெஸ்ட் எடுக்கிறார்!


கிட்டத்தட்ட 300 வீடியோக்கள்.. எல்லாமே டூயட் பாட்டுதான்.. ஷர்மிளாவுடன் ஜோடி சேர்ந்து டிக்டாக் வீடியோ பதிவிட்ட காதல் மன்னன் உமரை போலீசார் தூக்கி ஜெயிலில் உட்கார வைத்துள்ளனர்!

ஈரோட்டை சேர்ந்தவர் ஷர்மிளா (எ) ஹைருண்ணிசா… கணவரை பிரிந்து வாழ்பவர்.. 2 குழந்தைகள் உள்ளனர்.. தனியாக ஒரு வீடு எடுத்து வசித்து வந்தார்.. ஆன்லைன் வியாபாரம் செய்து வருகிறார்.

ஒருபக்கம் பிசினஸ் இருந்தாலும் இன்னொரு பக்கம் டிக்டாக் ஆசை உள்ளது.. அடிக்கடி டிக் டாக் வீடியோ பதிவுகளை போட்டு வந்துள்ளார். ஆண்களுடன் டூயட் பாடலுக்கு ஒன்றாக நடித்து வீடியோ போட்டுள்ளார்.. அப்போதுதான் ஈரோடு மரப்பாலம் பகுதியை சேர்ந்த உமர் செரீப் என்பவர் பழக்கமானார்.

உமர் ஒரு டிரைவர்.. மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.. ஆனால் டிக் டாக்கில் தம்பிகண்ணு என்ற பெயரில் அக்கவுண்ட் ஓபன் செய்துள்ளார்.. காதல் ரசம் சொட்டும் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். எப்படியும் 300 வீடியோக்கள் இருக்குமாம்.. அதனால்தான் உமரை 5600-பேர் பாலோ செய்தும் வருகின்றனர். அப்படி போய் சிக்கியவர்தான் ஷர்மிளா.

ஷர்மிளா – உமர் இருவருமே செல்போன் நம்பர்களை பகிர்ந்து கொண்டனர்.. கணவரை பிரிந்து குழந்தைகளுடன் வாழ்வதை ஷர்மிளா உமரிடம் சொல்லி உள்ளார்.. ஆனால் உமர், தன்னுடைய மனைவி, 2 குழந்தைகள் விஷயத்தையே ஷர்மிளாவிடம் மறைத்து விட்டார்.. அத்துடன் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் என்றும் ஷர்மிளாவை நம்ப வைத்துள்ளார்.

உடனே ஷர்மிளாவுக்கு உமர் மீது பரிதாபம் வந்துவிட்டது. நெருங்கி பழகினர்.. 8 மாதங்களாக கல்யாணமும் செய்து கொள்ளாமல் உறவில் இருந்துள்ளனர்.. ஷர்மிளாவிடம் 10-பவுன் தங்க நகையும் 20-ஆயிரம் ரொக்கபணமும் உமர் ஒருமுறை பெற்றுள்ளார். இதனிடையே கல்யாணம் செய்து கொள்ளும்படி ஷர்மிளா கேட்டு கொண்டே இருந்திருக்கிறார்.. ஆனால் உமர் மறுத்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தன்னிடம் இருந்து வாங்கிய நகை, பணத்தை ஷர்மிளா திரும்ப கேட்டபோது, அவரை மிரட்டி உள்ளார் உமர்… பணம், நகை பத்தி பேச்சை எடுத்தால், நெருக்கமாக இருந்தபோது எடுத்த வீடியோவை சோஷியல் மீடியாவில் போட்டுவிடுவதாக மிரட்டி உள்ளார். ஆரம்பத்தில் இருந்த பேச்சு, நடவடிக்கைகள் இப்போது உமரிடம் இல்லை.. இதனால் சந்தேகமடைந்த ஷர்மிளா ஒருநாள் உமரின் செல்போனை எடுத்து பார்த்துள்ளார்.

அப்போதுதான் ஏகப்பட்ட பெயரில் போலி அக்கவுண்ட்டுகளை உமர் வைத்திருந்தது தெரியவந்தது.. இதை பார்த்து அதிர்ந்த ஷர்மிளா கதறி அழுதார்.. தன்னை போல இனி எந்த பெண்ணும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று ஷர்மிளா ஈரோடு நகர ஸ்டேஷனில் புகார் தந்தார். அதன்பேரில் போலீசார் உமர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.. இப்போது இந்த ரோமியோ கம்பி எண்ணி கொண்டுள்ளார்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!