போலி பாஸ்போர்ட் வழக்கில் சிக்கிய ரொனால்டினோ ஜாமினுக்கு இத்தனை கோடியா..?


போலி பாஸ்போர்ட் வழக்கில் சிக்கிய ரொனாடினோ, ரூ. 12 கோடி செலுத்தி நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார். தற்போது வீட்டுக்காவலில் உள்ளார்.பிரேசில் கால்பந்தின் முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டினோ 40. கடந்த 2002ல் உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றிருந்தார். கடந்த 2015ல் அனுமதியின்றி மீன் பிடி குளம் அமைத்த வழக்கில் ரொனால்டினோ பாஸ்போர்ட், 2019ல் பறிமுதல் செய்யப்பட்டது.

சமீபத்தில் ரொனால்டினோ, தனது சகோதரர் மொரைய்ராவுடன் போலி பாஸ்போர்ட்டில் பராகுவே சென்றார். இதுகுறித்து விசாரித்த போலீசார் இருவரையம் கைது செய்து சிறையில் அடைத்தனர். மூன்று முறை ஜாமின் கேட்டு விண்ணப்பித்த போதும், அரசு அதிகாரிகளும் உதவி இருப்பதால், வழக்கின் தீவிரம் காரணமாக நிதிபதிகள் மறுத்து வந்தனர்.ஒருமாதம் சிறையில் இருந்த ரொனால்டினோ, தனது 40 வது பிறந்த நாளை சிறையில் தான் கொண்டாடினார்.

ஒருமாதம் சிறையில் இருந்த ரொனால்டினோ, தனது 40 வது பிறந்த நாளை சிறையில் தான் கொண்டாடினார். தற்போது ரூ. 12 கோடி செலுத்தி நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பராகுவேயில் ஊரடங்கு அமலில் உள்ளது.

இதனால் ரொனால்டினோவுக்கு நீதிபதி கஸ்டாவோ அமரில்லா, அலைபேசி வாயிலாக தீர்ப்பை தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்,”ரொனால்டினோ, அவரது சகோதரர் இருவரும் தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்படுவர்,” என்றார்.-Source: dinamalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!