பேஸ்புக் நிறுவனம் ஊழியர்களுக்கு எப்படிப்பட்ட சலுகைகளை வழங்கியுள்ளது தெரியுமா..?


இன்றைய நவீனமயமான வாழ்க்கை முறையில் டெக் மற்றும் இண்டர்நெட் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பங்கு இருப்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்று.

அதிலும் அமெரிக்காவில் உள்ள சில நிறுவனங்கள் ஊழியர்களுக்குச் சுமை அளிக்காமல் பெரிய பெரிய திட்டங்களை முடித்து ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறது. இப்படித் தொடர்ந்து ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும், திட்டங்களை மேம்பட்ட முறையில் முடிந்து, லாபகரமான ஒன்றாக மாற்றுவது என்பது சாதாரணக் காரியமில்லை. இதற்கு நிறுவனங்கள் பல்வேறு பணிகளைச் செய்ய வேண்டும்.

இதில் ஆதிமுதலானது ஊழியர்களை நிறுவனம், அதிகச் சம்பளம் தருவதையும் தாண்டி நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பேஸ்புக் நிறுவனம் தனது ஊழியர்களை எப்படியெல்லாம் உள்ளங்கையில் வைத்துத் தாங்குகிறது தெரியுமா..?

பேஸ்புக் நிறுவனத்தில் நீங்கள் வேலை செய்பவர்கள் சிலபல நாட்களுக்கு அலுவலகத்திலேயே தங்கி வேலை செய்ய ஏதுவாகச் சூழ்நிலையை அமைத்திட டிரை கிளீனிங் சேவையை அனைத்து ஊழியர்களுக்கும் இலவசமாக வழங்குகிறது.

அட இதுதானா என்று நினைக்க வேண்டும் முழுமையாகப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள்


பேஸ்புக் நிறுவனத்தின் தலைமையமான மெனலோ பார்க் அலுவலகத்தில் ஊழியர்கள் கொண்டு வரும் வாகனத்தைப் பார்கிங் செய்வதற்காகத் தடுமாற வேண்டாம், எளிமையான வேலெட் பார்க்கிங் சேவை மற்றும் எலக்ட்ரிக் கார்களுக்கு இலவசமாகச் சார்ஜ் செய்யும் தளம் ஆகியவற்றை வழங்குகிறது.

அலுவலகத்திற்குள்ளேயே இலவசமாக மருத்துவம் மற்றும் பல் பிரச்சனைகளைத் தீர்க்கும் மருத்துவமனைகளும் உண்டு.

அலுவலகத்திலேயே முடி திருத்தம் செய்யும் இடமும் உண்டு. நீங்கள் முடி வெட்டுவதற்காகக் கூட வெளியில் செல்ல வேண்டாம்.

நாள் முழுக்க உணவு மற்றும் ஸ்னாக்ஸ் இலவசம். எவ்வளவு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் ஊழியர்கள் சாப்பிடலாம்.

குழந்தை பெற்ற பெற்றோர்களுக்கு 4,000 டாலர் வரையிலான பணம் தருகிறது பேஸ்புக். அதோடு egg-freezing என்ற கரு முட்டையைப் பாதுகாக்கும் சிகிச்சை மற்றும் குழந்தையைத் தத்தெடுப்பதற்கும் நிதியுதவி செய்கிறது பேஸ்புக்.

பேஸ்புக் ஊழியர்கள் தங்களது மனவழுத்தத்தைக் குறைக்கவும், வேகமாகச் சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள ஏதுவாகக் கட்டிடத்தின் ஒரு அடுக்கு மொத்தமும் வீடியோகேம் விளையாடுவதற்காக உருவாக்கியுள்ளது பேஸ்புக்.


முழுநேர ஊழியர்கள் அனைவருக்கு வருடத்திற்கு 21 நாள் வேகேஷன் விடுமுறையை அளிக்கிறது. இந்த விடுமுறைக்குச் சம்பளமும் உண்டு என்பது கூடுதல் தகவல்.

பேஸ்புக் ஊழியர்கள் அனைவருக்கும் ஜிஎம் மெம்பர்ஷிப் முதல் பல ஆரோக்கியமான செயல்களுக்கான சேவைகளை அலுவலகத்திற்குள்ளேயே அளிக்கிறது.

ஊழியர்கள் ஆரோக்கியமாக இருக்கப் பொதுவாகச் சைக்கிள் பயன்படுத்துவார்கள், இவர்களுக்காகவே சைக்கிள் ரிப்பேர் கடை அலுவலகத்திற்குள்ளேயே அமைத்துள்ளது பேஸ்புக்.

குழந்தையைப் பெற்ற பெற்றோர்களுக்கு (தாய் மற்றும் தந்தை) 4 மாதம் முழுமையான விடுமுறையைச் சம்பளத்துடன் அளிக்கிறது பேஸ்புக். இந்தச் சலுகை குழந்தையைத் தத்தெடுத்தாலும் உண்டு.Source: tamil.goodreturns

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!