கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது..!


உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அந்நாட்டில் வேகமாக பரவி மனித பேரழிவை ஏற்படுத்த இந்த வைரஸ் தற்போது உலகின் 196 நாடுகளுக்கு பரவியுள்ளது.

தொடக்கத்தில் சீனாவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய இந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகளான இத்தாலி மற்றும் ஸ்பெயினில் ருத்ர தாண்டம் ஆடி வருகிறது.

சீனா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளையே ஆட்டம் காட்டி வரும் இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி பரவி வருகிறது.

இந்த வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் மேற்கொண்டுவருகின்றன.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்த வைரசுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 22 ஆயிரத்து 749 ஆக உள்ளது.

உலக அளவில் வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளதால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!