இத்தாலியில் கொரோனாவுக்கு 37 டாக்டர்கள் பலி.. 6205 மருத்துவ ஊழியர்கள் பாதிப்பு..!


இத்தாலியில் 6205 மருத்துவ ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 37 டாக்டர்கள் பரிதாபமாக உயிரிழந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது இத்தாலியை துவம்சம் செய்து வருகிறது. இந்த கொடிய வைரஸ் தாக்கி் இத்தாலியில் பலி்யானோர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தொட்டுள்ளது.

டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பகல் இரவாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே கொடிய வைரஸ் மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்களையும் விட்டுவைக்கவில்லை. இதுவரை 6205 மருத்துவ ஊழியர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் 37 டாக்டர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நேற்று மற்றும் 3 டாக்டர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதில் என்ன கொடுமை என்றால் பாதிக்கப்பட்டவர்களில் 8.3 சதவிதம் பேர் மருத்துவ துறையைச் சேர்ந்தவர்கள். இதனால் இத்தாலி என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளித்து வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்கிய செவிலியர் ஒருவர் மற்றவர்களுக்கு தன்னால் பரவக்கூடாது என்பதற்காக உயிரை மாய்த்துக் கொண்டார் எனக் கூறப்படுகிறது.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!