இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் 23-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு..!


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் 23-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் பிறப்பெடுத்த கொரோனா வைரஸ் இன்று ஒட்டுமொத்த உலகையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கிறது. நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வைரசின் தாக்குதலுக்கு ஆளாகி வருவதுடன், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும் வருகின்றனர்.

இத்தகைய கொடிய வைரசுக்கு ஆசிய நாடுகளும் தப்பவில்லை. இந்தியாவின் அண்டை நாடான இலங்கையிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இலங்கையில் தற்போது வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் 23 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.-source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!