மனைவி – மகன்களை கொன்று என்ஜினீயர் தற்கொலை… அதிர வைத்த காரணம்..!


ஐதராபாத் அருகே ரூ.22 லட்சம் கடனை அடைக்க முடியாததால் மனைவி மற்றும் மகன்களை கொன்று என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐதராபாத் ஹஸ்தினாபுரம் எல்.பி. நகரை சேர்ந்தவர் பிரதீப்குமார் (வயது 36). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் ஐ.பி.எம். நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு சுவாதி (28) என்ற மனைவியும், 6 வயது மற்றும் 1½ வயதில் 2 மகன்களும் உள்ளனர். பிரதீப்குமார் சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

இதற்காக சிலரிடம் வட்டிக்கு கடன் வங்கினார். ஆனால் நிறுவனம் தொடங்கும் அவரது முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதனால் அவர் வாங்கிய ரூ.22 லட்சம் கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்ததால் அவர் மனவேதனை அடைந்தார்.

கடந்த சனிக்கிழமை அவர் குடும்பத்தோடு சாக முடிவு செய்துள்ளார். அதன்படி மனைவி மற்றும் 2 மகன்களுக்கும் வி‌ஷம் கொடுத்து கொலை செய்துள்ளார்.

பின்னர் தானும் வி‌ஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். சுவாதியின் பெற்றோர் செல்போனில் பல முறை தொடர்பு கொண்டும் போனை எடுக்காததால் சந்தேம் அடைந்தனர். அவர்கள் வீட்டுக்கு சென்றபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. போலீஸ் மூலம் கதவை உடைத்து உள்ளே சென்றபோது வீட்டுக்குள் 4 பேரும் இறந்து கிடந்தனர்.

உடல்களை கைப்பற்றிய போலீசார் வீடு முழுவதும் சோதனை செய்தனர். அப்போது பிரதீப் குமார் எழுதிய வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில், “நான் சொந்தமாக நிறுவனம் தொடங்க நினைத்தேன். இதனால் கடன் அதிகமாக வாங்கிவிட்டேன். அதை அடைக்க முடியாததால் இந்த முடிவை எடுக்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள்” என எழுதி உள்ளார்.

வீட்டில் இருந்த அவரது லேப்டாப் மற்றும் செல்போன் ஆகியவற்றையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!