பாபா முத்திரையை சுற்றியபடி ஒரு பாம்பு.. என்ன அர்த்தம் தெரியுமா..?


தமிழக ஊடகங்கள் எதிர்பார்த்த மாதிரி நடிகர் ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டார்.

ரஜினியின் இந்த அறிவிப்பால் அவரின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

அதனோடு., www.rajinimandram.org’ என்னும் தன்னுடைய இணையதள பக்கத்தை திறந்து இருக்கிறார்.

இந்த இணையதள லோகோவில் இருக்கும் பாபா முத்திரைதான் ரஜினி தொடங்க இருக்கும் கட்சியின் முத்திரையாக இருக்கும் என்று
கூறுகின்றனர்.


அந்த பாபா முத்திரையை சுற்றியபடி பாம்பு ஒன்று இருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாபா முத்திரையில் பாம்பு எப்படி..? என்கின்ற கேள்வி எழுகிறதா..?
அதற்கு காரணம்., ராமகிருஷ்ண மடத்தின் லோகோவிலும் இதேபோல் வட்டமாக பாம்பு சுற்றி இருப்பது போன்ற சின்னம் இருக்கும்.

ரஜினி ராமகிருஷ்ண மடத்தில் படித்தவர் என்பதால் அதன் நினைவாக இந்த லோகோவை வடிவமைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

ராமகிருஷ்ண மடத்தின் லோகோ சுவாமி விவேகானந்தரால் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.-Source: seithipunal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!