எந்த தெய்வத்தை எந்த மலர் கொண்டு வழிபடக்கூடாது..?


சில மலர்கள் இறை வழிபாட்டிற்கு உகந்தவை அல்ல. எந்த தெய்வத்தை எந்த மலர் கொண்டு வழிபடக்கூடாது என்பதை பார்க்கலாம்..

விநாயகர் – துளசி

சூரியன் – தும்பை

பைரவர் – அரளி

துர்க்கை – நந்தியாவட்டை

பார்வதி – பாதிரி

விஷ்ணு – செம்பருத்தி

சிவன் – தாழம்பூ

நைவேத்திய முறை

வீட்டு பூஜையறையில் நைவேத்தியம் வைத்து வழிபடுவதற்கும் விதிமுறைகள் உள்ளன. தெய்வ படங்களின் முன்பு உள்ள தரையை நீர்விட்டு சுத்தப்படுத்தி, சதுரமான மண்டலம் மஞ்சள் பொடியால் போட்டு, ஸ்ரீ- ஓம் என்று எழுதி, அதன் மீதுதான் நைவேத்தியம் வைக்க வேண்டும். தென்கிழக்கில் பட்சணங்கள், தென்மேற்கில் பருப்பு, வடமேற்கில் கறி வகைகள், வடகிழக்கில் பாயசம், நடுவில் அன்னம் என பரிமாறி, அன்னத்திற்கும், பாயசத்திற்கும் நடுவில் நெய், வலது பக்கம் சுத்தமான குடிநீர் வைத்து நைவேத்தியம் படைக்க வேண்டும்.

தொகுப்பு:- அ.யாழினி பர்வதம்

-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!