ஜமால் கசோகியை கொன்ற 5 பேருக்கு மரண தண்டனை விதித்த சவுதி அரசு.!


துருக்கியில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்டதில் நேரடி தொடர்புள்ள 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கசோகி (59), என்ற பத்திரிகையாளர் துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

சவுதி அரேபியாவை சேர்ந்த கூலிப்படையினரால் கசோகி கொல்லப்பட்டார் என்று பல தரப்பிலும் எழுந்த குற்றச்சாட்டை சவுதி அரேபியா மறுத்து வந்தது.

எனினும், சர்வதேச அழுத்தத்துக்கு அடிபணிந்து ஜமால் கசோகி கொலை தொடர்பான விசாரணைக்கு சவுதி அரசு உத்தரவிட்டது. இந்த கொலையில் சவுதி பட்டத்து இளவரசர் உள்பட 7 பேர் மீது ரியாத் நகரில் உள்ள நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், ஜமால் கசோகி கொல்லப்பட்டதில் நேரடி தொடர்புள்ள 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பட்டத்து இளவரசர் உள்பட இருவர் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் சவுதி அரேபியா அரசின் தலைமை வழக்கறிஞர் இன்று தெரிவித்தார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!