ஆண்டுக்கு ரூ.185 கோடி… யூ டியூப் சேனல் மூலம் சம்பாதிக்கும் சிறுவன்..!


அமெரிக்காவை சேர்ந்த ரியான் காஜி என்ற 8 வயது சிறுவன் தனது யூ டியூப் சேனல் மூலம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.184 கோடி சம்பாதித்து முதல் இடத்தை பிடித்துள்ளான்.

உலகளவில் ‘யூ டியூப்’ சேனல் மூலம் அதிக வருமானம் ஈட்டும் நபர்களின் பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. அதில் அமெரிக்காவை சேர்ந்த ரியான் காஜி என்ற 8 வயது சிறுவன் தனது யூ டியூப் சேனல் மூலம் 26 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.184 கோடியே 98 லட்சத்து 55 ஆயிரம்) சம்பாதித்து முதல் இடத்தை பிடித்துள்ளான்.

ரியானின் பெற்றோர் கடந்த 2015-ம் ஆண்டு ‘ரியானின் உலகம்’ என்ற பெயரில் யூ டியூப் சேனலை தொடங்கினர். சிறுவர்களுக்கான விளையாட்டு பொம்மைகளை மதிப்பாய்வு செய்து ரியான் வீடியோக்களை வெளியிட்டு வருகிறான்.

தற்போது இந்த சேனலுக்கு 2 கோடியே 30 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். ரியானின் பல வீடியோக்கள் 100 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளன. ரியான் தற்போது சிறிய அளவிலான அறிவியல் பரிசோதனைகளையும் செய்து வீடியோ வெளியிட்டு வருகிறான்.

அதே போல் ரஷியாவை சேர்ந்த 5 வயது சிறுமியான அனஸ்டாசியா ராட்ஜின்ஸ்காயா 18 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 128 கோடி) வருமானத்துடன் 3-வது இடத்தை பிடித்து இருக்கிறாள்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!