சிறுமியை பலாத்காரம் செய்து மர்மநபர் அரங்கேற்றிய கொடூரம்..!


பீகார் மாநிலத்தில் சிறுமியை கற்பழித்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பீகார் மாநிலம் புக்சர் மாவட்டம் கூகுதா கிராமத்தில் உள்ள வயல் வெளியில் சிறுமி ஒருவர் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

இதை பார்த்த கிராம மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுமியின் உடலை மீட்டனர்.

அந்த சிறுமியை மர்ம நபர்கள் கற்பழித்து உள்ளனர். பின்னர் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக சிறுமி உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட சிறுமி யார்? என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இந்த கொடூர செயலை செய்த குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

கர்நாடக மாநிலம் கலபுராகி மாவட்டம் சின்சோலி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி அருகே 8 வயது சிறுமி பிணமாக கிடந்தாள். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டனர்.

அந்த கிராமத்தை சேர்ந்த அந்த சிறுமி காலையில் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்றார். ஆனால் அவர் பள்ளிக்கு செல்லாமல் மாயமாகி விட்டார்.

அவரை பெற்றோர் தேடி வந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. சிறுமி கொலை செய்யப்பட்ட பிறகு அந்த கிராமத்தை சேர்ந்த யல்லலிங் செடம் என்பவர் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை போலீசார் பிடித்து விசாரித்த போது சிறுமியை கற்பழித்து கொன்றது தெரியவந்தது. பள்ளிக்கு சென்ற சிறுமியிடம் சாக்லெட் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றார்.

மறைவான இடத்தில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று உள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!